Home அந்தரங்கம் முதல்முறையாக உறவு கொள்வோர் தங்களை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும்?

முதல்முறையாக உறவு கொள்வோர் தங்களை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும்?

69

‘என்னப்பா! ஏதோ பரீட்சைக்கு தயார் செய்வது போல, முதல்முறையாக உறவு கொள்வோர் தங்களை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுள்ளீர்கள்’ என நீங்க கேட்க வருவது புரிகிறது. ஆனால் அப்படித்தானே நடக்கிறது? எல்லோர் வாழ்விலும் முக்கியமான ஒரு பகுதி, ஆனால் அது குறித்த தெளிவு கிடையாது. திருமணம் என வரும்போதுதான், நண்பர்கள், நெருக்கமான உறவுகள் தங்களுக்கு தெரிந்த தெல்லாம் கூறுவார்கள். அப்போதும் தெளிவு பிறந்திருக்காது. குழப்பத்தோடு அல்லது சந்தேகத்தோடே உள்ளே போகவேண்டும். துணையின் தேவையை அறிந்து, நிபுணர்கள் அறிவுரை இருந்தால் மட்டுமே இந்த விஷயத்தில் தெளிவு பிறக்கும்.

இந்த விஷயத்தை பொறுத்தவரையில், தனது துணையோடு கலந்துரையாடிய பின்னர் எடுக்க வேண்டிய முயற்சிகள் சில உள்ளன. உதாரணத்திற்கு சிலர் தங்களது துணையோடு பேசி, கட்டான உடல்வாகு பிடிக்கும் என்பதை அறிந்து கொண்டு, திருமணம் உறுதி ஆனதும் உடனே ஜிம்மில் சேர்ந்து ஒர்க் அவுட் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இப்படி முதலில் துணையோடு நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

திருமண நாள் நெருங்குவதற்கு முன்னர் சில மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ளுங்கள். விந்து திரவத்தில் விந்தணுவின் அடர்த்தி போன்ற இன்றியமையாதவற்றை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏதேனும் குறை இருந்தால் அதற்கென பயிற்சிகள் அல்லது சிகிச்சை எடுத்து கொள்ளலாம்.

திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் நேரம் தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இல்லையெனில் சில யோகாசன பயிற்சிகள் ஆண்மையை அதிகரிக்க உதவுகின்றன. அவற்றை தெரிந்துகொண்டு செய்யுங்கள். ஜங் புட்டை தவிர்த்து கீரை, பழவகைகள் என ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.

விந்து முந்துதல் உள்ளவர்கள் கேஜெல் பயிற்சிகளை செய்து கட்டுபடுத்தலாம். கேஜெல் பயிற்சியின் நோக்கம், அந்த நேரத்தில் உறவை வலுப் பெறச்செய்வதாகும். இதனை முறையாக செய்ய வேண்டும். யூடியூபில் பார்த்து செய்வது சரியல்ல. முறையான மாஸ்டர் வைத்து செய்வதே பாதுகாப்பானது. விந்து முந்துதல் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். முதல்முறையாக உறவு கொள்வோர் மேற்கண்டவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவது உறவை சிறப்பாக்கும்.