Home சமையல் குறிப்புகள் மீல் மேக்கர் பக்கோடா

மீல் மேக்கர் பக்கோடா

25

தேவையான பொருட்கள் :-
மீல் மேக்கர் – 20 உருண்டைகள்,
கடலைப் பருப்பு – ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 10,
பச்சை மிளகாய் – 2,
தேங்காய் துருவல் – ஒரு மேஜைக் கரண்டி,
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி,
பிரெட் ஸ்லைஸ் – 3,
எலுமிச்சை சாறு – ஒரு மேஜைக் கரண்டி,
இஞ்சி விழுது-ஒரு தேக்கரண்டி,
பூண்டு விழுது – ஒரு தேக் கரண்டி,
கொத்துமல்லித் தழை – சிறித ளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு
செய்முறை :-
மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்து நிமிடம் கழித்து அதை பிழிந்து, பின் பச்சை தண்ணீரில் அலசி, மிக்சியில் அடித்து உதிர்க்கவும்.
கடலை பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
வாணலியில் எண்ணெய் விட் டு, வெங்காயம், தேங்காய் துரு வல், இஞ்சி, பூண்டு விழுதை லேசாக வதக்கவும்.
பிறகு, மீல் மேக்கர், கடலைப் பருப்பு, உப்பு, பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மிக்சியில் அரைக்க வும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த கல வையை கிள்ளிப் போட சூடான, சுவையான மீல் மேக்கர் பக்கோடா ரெடி.
குறிப்பு
பொரிக்கும்போது அதிக தீயி ல் பொரிக்க வேண்டாம். மேல் பாகம் சிவந்து விடும். ஆனால் உள்வரை வேகாது.
மருத்துவத்தில் மீல் மேக்க‍ர் பங்கு
மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும் சோயா மொச்சை முதலிடத்தில் இருக்கிறது. இத்துடன் மூன்று மடங்கு வேகத்தில் இதய நோய்களைத் தடுக்கிறது சோயா. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்டுகள் மிகவும் சக்திவாய்ந்தவை. தினமும் மூன்று மீல் மேக்கர் உருண்டைகள் உணவில் இடம் பெறுவது நல்லது.