Home பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் ‘சிக்ஸ் பேக் படை’!

மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் ‘சிக்ஸ் பேக் படை’!

17

மார்பகப் புற்று நோய் குறித்த விவரங்களைக் கூறி பெண்களுக்கு விழிப்புணர்வு தருவதற்காக ஒரு நூதன முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. ரீதிங் பிரஸ்ட் கேன்சர் என்ற அமைப்பு இதுதொடர்பாக செல்போன் மூலம் இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கவர்ச்சியான பெண்கள் மீது ஆண்களுக்கும், கட்டுமஸ்தான ஆண்கள் மீது பெண்ளுக்கும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையானது. இந்த அடிப்படையைப் பயன்படுத்தித்தான் ரீதிங் அமைப்பு இந்த வித்தியாசமான முயற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாம்.

விஷயம் ரொம்ப சிம்பிளானது. ரீதிங் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ள ‘Your Man Reminder’ என்ற ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உங்களது ஸ்மார்ட் போனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதைப் பயன்படுத்தும்போது ஒரு டாக்டர் தோன்றி மார்பகப் புற்றுநோய் குறித்து விளக்கம் அளிப்பார்.

பின்னர் ஆறு சிக்ஸ் பேக் ஆண்களின் பட்டியல் அதில் இடம் பெறும். அதில் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒருவரைத் தேர்வு செய்யலாம். அப்படித் தேர்வு செய்யும்போது, அந்த நபர் திரையில் தோன்றுவார். பின்னர் மேலாடை இல்லாமல், கட்டுமஸ்தான தோற்றத்தைக் காட்டியபடி வரும் அவர் பெண்களுக்கு மார்பகப் பராமரிப்பு, புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, எளிய வழிமுறைகள் உள்ளிட்டவற்றைப் பற்றி எளிதான வார்த்தைகளில் விளக்குவார்.

இதுதான் இந்த ‘Your Man Reminder’ அப்ளிகேஷன் மூலம் ரீதிங் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ள மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு விளம்பரமாகும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

இதுகுறித்து கனடாவைச் சேர்ந்த இந்த அமைப்பைச் சேர்ந்த ஆலிசன் கார்டன் கூறுகையில், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை எளிய முறையிலும், வேடிக்கையான முறையிலும் சொல்ல நினைத்தபோது உருவானதுதான் இந்த ஐடியா.

கட்டுமஸ்தான ஆண்கள் மீது குறிப்பாக சிக்ஸ் பேக் கொண்ட ஆண்கள் என்றால் பெண்களுக்கு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும். எனவே சிக்ஸ் பேக் கொண்ட ஆணை விட்டே மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடம் சொல்லும்போது நிச்சயம் காது கொடுத்துக் கேட்பார்கள் என்று நினைத்தோம். எங்களது எண்ணம் வீண் போகவில்லை. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூபிலும் இது செமத்தியான ஹிட்டாகியுள்ளதாம்.

கவர்ச்சியை காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றாலும் கூட இது நிச்சயம் நல்ல முயற்சி என்பதில் சந்தேகமில்லை.