Home பாலியல் துர்நாற்றத்துடன் மாதவிடாய் உதிரப்போக்கு வெளிப்படுகிறதா? இந்த நோயாக இருக்கலாம்

துர்நாற்றத்துடன் மாதவிடாய் உதிரப்போக்கு வெளிப்படுகிறதா? இந்த நோயாக இருக்கலாம்

26

மாதவிடாய் காலத்தில் வெளிப்படும் உதிரப்போக்கின் நிறத்தினை வைத்து நம் உடலில் எவ்விதமான ஆரோக்கிய குறைபாடுகள் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

குறைபாடுகளை உணர்த்தும் உதிரப்போக்கு எப்படி இருக்கும்?
மாதவிடாயின் உதிரத்தின் அடர்த்தி அதிகமாகவும், அதிக அளவிலும் வெளியேறினால், அது கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறுகிறது என்று அர்த்தம்.
சீரற்ற அல்லது தொடர்ச்சியான மாதவிடாய், மாதவிடாய் உதிரப்போக்கு ஒரே நாளில் முடிந்து விடுவது, போன்ற அறிகுறிகள் சினைப்பை நீர்க்கட்டி இருப்பதை குறிக்கிறது.
அதிக வலியோடு மாதவிடாய் நிகழ்வு ஏற்பட்டால், அது கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் உள்ளது என்று அர்த்தம். இந்த கட்டிகள் பெரிதாகும் போது உதிரப்போக்கும் அதிகமாக வெளியேறும்.
மாதவிடாய் காலத்தில் வெளிப்படும் உதிரப்போக்கு துர்நாற்றத்துடன் வெளியேறினால், அது எண்டோமெட்ரியல் புற்றுநோயாக இருக்கலாம்.
மாதவிடாய் நின்ற பின்பும் உதிரப்போக்கு வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.