Home பாலியல் மாதவிடாய்க்குப்பின் ஒவ்வொரு நாளும் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள்…!!

மாதவிடாய்க்குப்பின் ஒவ்வொரு நாளும் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள்…!!

22

01 (1)மாதவிடாய்க்குப்பின் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு(ள்) ஏற்படும் மாற்றதை அழகாக விளக்கும் கட்டுரை இது. திருமணமான ஒவ்வொருவரும் இக்கட்டுரையிலுள்ள விஷயங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டால் இல்லறம் இனிதாக இனிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1 முதல் 5-ம் நாள் வரை

மாதவிலக்கு சுழற்சியின் ஆரம்ப நாட்களான இவற்றில் பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவாக இருக்கும். அதன் விளைவாக அவள் அமைதியின்றியும், தூக்கமின்றியும், டென்ஷனுடனும் காணப்படுவாள். பெரும்பாலும் இந்நாட்களில் பெண் அதற்குத் தயாராக இருப்பதில்லை. செக்ஸுக்கு அவளைக் கட்டாயப்படுத்தாமல், வேறு வேலைகளில் பிசியாக வைத்திருப்பது நல்லது.

6 முதல் 9-ம் நாள் வரை

பெண் உடலளவிலும், மனத்தளவிலும் ரொம்பவே உற்சாகமாக உணரும் நாட்கள் இவை. எதைப் பற்றிப் பேசினாலும் டென்ஷனாக மாட்டாள். அவளது உடல் செக்ஸ் உறவுக்குத் தயாராக இருக்கும்.

10 முதல் 15-ம் நாள் வரை

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருக்கும் நாட்கள் இவை. எனவே இந்நாட்களில் செக்ஸ் உணர்வுகள் அவளுக்கு அதிகமிருக்கும். மற்ற நாட்களில் செக்ஸ் உறவின் போது தேவைப்படுகிற முன் விளையாட்டுக்கள் இந்நாட்களில் அதிகம் தேவையிருக்காது. கணவனின் கிசுகிசுப்புக் குரலுக்கும், லேசான ஸ்பரிசத்திலுமே அவளது உடல் உடனடியாக ஒத்துழைக்கும்.

15-ம் நாள்

பெண்ணின் செக்ஸ் உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் நாளாம் இது. இந்த நாள் அவள் கருத்தரிக்கவும் ஏற்ற மிகச் சரியான நாளாம். இந்நாளில் பெரும்பாலும் தன் கணவர் தன்னுடனேயே இருக்க வேண்டும் எனப் பெண் விரும்புவாள். மற்ற நாட்களில் சாத்தியப்படாத உறவின் போதான உச்சக்கட்டம், இந்நாளில் இரண்டு, மூன்று முறை கூடக் கிட்டுமாம்.

16 முதல் 23-ம் நாள் வரை

ஈஸ்ட்ரோஜென் மீண்டும் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கிற காலமிது. இந்நாட்களில் பெண்ணுக்குள் ஆண்மை உணர்வு கொஞ்சம் தலை தூக்கியிருக்குமாம். கணவனின் வழக்கமான ஆதிக்கத்தை உறவின் போது இந்நாட்களில் பெண் விரும்புவதில்லை என்கின்றன ஆராய்ச்சிகள்.

பிராஜஸ்டரோன் என்கிற ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். எடுத்ததற் கெல்லாம் எரிச்சலடைவது, படபடப்பாவது என பெண்ணின் மனநிலை வேறுமாதிரி இருக்கும். தன் தோற்றம் எப்படியிருக்கிறது, மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்கிற கவலை அதிகமிருக்கும்.

குழந்தைகளிடமும் கோபப்படுவாள். இந்நாட்களில் மனைவியுடன் பிக்னிக் செல்வது, பேட்மின்ட்டன் மாதிரியான விளையாட்டுக்களில் ஈடுபடுவது அல்லது அவளை பிசியாக வைத்திருப்பது போன்றவை ஏற்றதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் விஷயத்தைப் பொறுத்தவரை, அது அவளது விருப்பம். இந்நாட்களில் செக்ஸ் ஆர்வம் என்பது பெண்ணுக்குப் பெண் வேறுபடும் என்பதால், அதை அவளது விருப்பத்துக்கே விட்டுவிடுவது நல்லது. கட்டாயப்படுத்துவது கூடாது.

27 மற்றும் 28-ம் நாட்கள்

அடுத்த மாதவிலக்குக்குத் தயாராகும் நாட்கள் இவை. அவளது உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் பிராஜஸ்ட்ரோன் என இரண்டு ஹார்மோன்களுமே குறைந்து காணப்படும்.

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைந்து காணப்படுவதால், சாக்லேட் மாதிரியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் ஆவல் அவளுக்கு அதிகமிருக்கும்.

இம்மாதிரியான உணவுகள் அவளது மனநிலையை ஓரளவுக்கு சரியாக்கும் என்றாலும் அதன் விளைவாக அவளது உடல் எடை எக்குத்தப்பாக எகிறுவதும் இந்நாட்களில்தான்.

வெளியிடங்களுக்குச் செல்லவும், வெளியே சாப்பிடவும் இந்நாட்களில் விருப்பம் அதிகமிருக்கும் என்பதால் கணவர்கள் அதற்கு ஆவன செய்யலாம். இதற்குப் பிரதிபலன் பட்டியலின்படி பார்த்தால் பதினைந்தாம் நாள் கணவனுக்குத் திரும்பக் கிடைக்கும்.