Home ஆரோக்கியம் மலம் கழிக்கும்போது இந்த பிரச்னையெல்லாம் உங்களுக்கும் இருக்கா?… அப்போ இது மூலநோயா கூட இருக்கலாம்..

மலம் கழிக்கும்போது இந்த பிரச்னையெல்லாம் உங்களுக்கும் இருக்கா?… அப்போ இது மூலநோயா கூட இருக்கலாம்..

31

மூலநோய் என்பது மலக்குடலிலுள்ள ரத்த நாளங்களில் ஏற்படுகிற வீக்கமும் ரத்தக்கசிவும் தான். அத்தகைய வீக்கமும் எதனால் உண்டாகிறது?… அதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

மூலநோய் ஏற்படுவதற்கு ஆசனவாய்ப் பகுதியின் நரம்புகளில் ஏற்படக்கூடிய அழுத்தம், குழந்தை பிறப்பு, நாள்பட்ட மலச்சிக்கல், அதிகப்படியான உடல் பருமன், வயிற்றுப்போக்கு, மிக கனமான பாரத்தை தூக்குதல், நீண்ட நேரம் நிற்கும் அல்லது அமரும் சூழ்நிலை, குடும்ப வரலாறு மற்றும் துரித உணவு போன்றவை காரணங்களாகும். மூலநோயை அறுவை சிகிச்சை, பேண்டிங் போடுதல் மற்றும் ஸ்டாப்ளர் சிகிச்சை போன்ற சிகிச்சைகளால் சரிசெய்யலாம்.

மூலநோயை குணப்படுத்துவதில் நம்முடைய உணவுப் பழக்கமும் சிறந்த முறையில் கைகொடுக்கும். என்னென்ன உணவுகளைச் சாப்பிட்டால் மூலநோயை குணப்படுத்தலாம்.

நார்சத்து மிகுந்த உணவை உட்கொள்வதால் எந்த பிரச்னையுமில்லாமல் எளிதாக மலம் வெளியேறும். ஜங்க் ஃபுட் சாப்பிடுவது, போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் மலம் இறுகி வெளிவருவதற்கு சிரமம் ஏற்படும். எனவே, கடினமாக முயற்சி செய்து மலத்தை வெளியேற்றுவதன் மூலம் மூலம் வெளியே வர நேரிடும்.

ஆசனவாயில் அரிப்பு, அசெளகரியம், ரத்தப்போக்கு ஆகியவை இதற்குரிய அறிகுறிகளாக அமையும். சில சமயங்களில் மலம் சளி போன்று காணப்படும்.

சிலருக்கு கர்ப்ப காலத்தின்போது பைல்ஸ் பிரச்னையால் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படுவதுண்டு. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள்ஒருமுறை அறுவை சிகிச்சை செய்தால் போதுமா?… திரும்ப வராதா என்ற சந்தேகம் எழும்.

அறுவை சிகிச்சை செய்து கொண்டால் மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை. பொதுவாக ஆரம்ப நிலையிலுள்ள மூலத்திற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. சிறிது அதிகமாகும்போது பேண்டிங் முறையில் சரிசெய்யலாம். மிகவும் அதிகமான நிலையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். மீண்டும் வராமல் தடுக்க சரியான உணவு முறையைக் கடைபிடிக்க வேண்டும்.

வெளிமூலம் என்பது உள்ளிருந்து வெளியே தள்ளப்படுவதாகும். ஆகவே, உள்ளே பெருங்குடல் பகுதியில் ஏதேனும் பிரச்சினை இருக்கும். எனவே, கொலொனோஸ்கோபி பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.

மூலம் உள்ளவர்களுக்கு கொலொனோஸ்கோபி கருவியால் சிகிச்சை மேற்கொண்டால் காயங்கள் ஏற்படுமா என்ற சந்தேகம்கூட வரும். ஆனால் மூலம் உள்ளவர்களுக்கு கொலொனோஸ்கோபி பரிசோதனை மூலம் எந்தவித காயமும் ஏற்படாமல் உறுதி செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும்.

கொலொனோஸ்கோபி பரிசோதனைக்கு வயது வரம்பு உள்ளதா?

காலொனோஸ்கோபி பரிசோதனைக்கு வயது வரம்பு இல்லை. பெருங்குடல் பகுதியில் பிரச்சினை ஏதேனுமிருந்தால் எந்த வயதினரும் கொலொனோஸ்கோபி பரிசோதனை செய்து கொள்ளலாம்.