Home குழந்தை நலம் மற்ற பிள்ளைகளைவிட உங்கள் குழந்தை அறிவாளியா இருக்கணுமா?… அதற்கு என்ன செய்யலாம்?…

மற்ற பிள்ளைகளைவிட உங்கள் குழந்தை அறிவாளியா இருக்கணுமா?… அதற்கு என்ன செய்யலாம்?…

36

பொதுவாக எல்லா பெற்றோருக்கும் இந்த ஆசை இருக்கும். மற்ற குழந்தைகளைவிட தங்கள் பிள்ளைகள் அதிக புத்திசாலித்தனத்துடன் இருக்க வேண்டும்.

அப்படி உங்கள் பிள்ளைகளின் அறிவாற்றல் அதிகமாக வேண்டுமென்றால் என்னவெல்லாம் செய்யலாம்?…

பிள்ளைகள் உங்களிடம் ஏதாவது பிரச்னையைச் சொல்ல வந்தால், காது கொடுத்துக் கேளுங்கள்.

ஆனால், உடனடியாக தீர்வைச் சொல்லிவிடாதீர்கள். அதற்கு என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேளுங்கள்.

பிரச்னைகளுக்கான தீர்வை தானே கண்டுபிடிக்கும் குழந்தைகள், ஐ.க்யூ.வில் ஸ்டிராங்காக வளர்வார்கள்.

பிள்ளைகள் நன்றாக ஓடியாடி விளையாடுவதும் ஐ.க்யூ வளர்வதற்கான வழி. எப்படி என்கிறீர்களா?

நன்றாக விளையாடும் பிள்ளைகளுக்கு கால் நரம்புகளில் ஆரம்பித்து மூளை வரை ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

மூளைக்கு நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கும். இது ஐ.க்யூவை வளர்க்கும் அவ்வளவுதான்.