Home ஆரோக்கியம் மனஅழுத்தமும் செக்சும்

மனஅழுத்தமும் செக்சும்

27

மனஅழுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்காதவர்கள் இல்லை. அந்த அளவிற்கு

பெரும்பாலோனோரை ஆட்டிப்படைக்கிறது மனஅழுத்தம். மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் இந்த மனஅழுத்தம் தாம்பாத்ய வாழ்க்கையிலும் சரியாக ஈடுபடமுடியாமல் செய்கிறதாம்.

மனஅழுத்தம் காரணமாக 70 சதவிகிதம் பேர் தாம்பத்ய விளையாட்டில் வெற்றி பெறமுடியாமல் வெளியேறிவிடுகின்றனர் என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். கவலை, நம்பிக்கையின்மை, வேலைப்பளுவினால் ஏற்படும் சிக்கல் போன்றவையும் மன அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது.

எனவே மனஅழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

மனஅழுத்தம் காரணமாக படுக்கை அறையில் சரியாக இயங்கமுடியாமல் போய்விட்டால் அது உங்களின் துணையை பாதிக்கும். அது இல்லற வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும் என்று கூறும் நிபுணர்கள் உங்களுக்கு உள்ள உளவியல் ரீதியான சிக்கலை வாழ்க்கைத்துணையிடம் பேசி புரியவைக்கலாம் என்கின்றனர். செக்ஸ் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் மனஅழுத்தம் பின்னர் குடும்பவாழ்க்கையை குழிதோண்டி புதைத்துவிடும் என்கின்றனர்.

மனஅழுத்தம் கொண்டவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பிற்குள்ளாவது ஒருபுறம் இருக்க பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்ட நபர்கள் மனஅழுத்தத்திற்குள்ளாவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வில் நடைபெற்ற ஆய்வில் கவனக்குறைவாக செக்ஸ் உறவில் ஈடுபட்டவர்கள். காண்டம் உபயோகிக்காமல் உடலுறவு கொண்டவர்கள் பலரும் மனஅழுத்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற கண்டறியப்பட்டது.

நீடித்த இன்பம் வேண்டும் என்பதற்காகவும், எழுச்சி நிலைக்காகவும் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை செக்ஸ் உறவை பாதிக்கும் காரணிகளாகின்றன. இதனால் சரியான உச்சநிலை ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

மன அழுத்தம் காரணமாக தாம்பத்ய உறவில் ஏற்படும் சிக்கலை மருந்து மாத்திரைகளினால் மட்டுமே நீக்கமுடியாது. எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், அபரிமதமான தன்னம்பிக்கையும் இருந்தால் மனஅழுத்தம் நீங்கி மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.