Home அழகு குறிப்பு கூந்தல் அழகு பொடுகுத்தொல்லையை உடனடியாகப் போக்கும் சிம்பிள் வழிகள்

பொடுகுத்தொல்லையை உடனடியாகப் போக்கும் சிம்பிள் வழிகள்

26

அடிக்கடி தலைக்கு குளிப்பது, எண்ணெய் வைக்காமல் விடுவது, தூசு போன்ற பல காரணங்களால் தலையில் பொடுகு ஏற்படுகிறது.

பொடுகைப் போக்க கண்ட ஷாம்புகளையும் வாங்கிப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு வீட்டிலுள்ள இயற்கைப் பொருள்களைக் கொண்டு மிக வேகமாக பொடுகைச் சரிசெய்துவிட முடியும்.

இயற்கை முறையில் ஒரு மாஸ்க் செய்து தலையில் போட்டு குளித்துவர, பொடுகு விரைவில் மறைந்து போகும்.

தலைமுடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தயிரில் ஏராளமாக உள்ளது. மேலும் இதில் சேர்க்கப்படும் எலுமிச்சையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் அதிகம் இருப்பதால், முடியின் வேர்க்கால்களில் உள்ள தொற்றுக்கள் அழிக்கப்பட்டு வேர்க்கால்களை உறுதியடையச் செய்யும்.

தேவையான பொருட்கள்

தயிர் – அரை கப்

எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

தேன் – ஒரு தேக்கரண்டி

டீ-ட்ரீ எண்ணெய் – சில துளிகள்

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் 1/2 கப் தயிரை எடுத்து, அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பலரும் தேன் முடியை வெள்ளையாக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தேன் மயிர்கால்களுக்கு ஈரப்பதமூட்டி, முடியை மென்மையாக வைத்திருக்க உதவும்.

அத்துடன் 3-4 துளிகள் டீ-ட்ரீ எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். டீ-ட்ரீ எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. இது பொடுகை எளிதில் அழித்து விரட்டும்.

கலந்து வைத்துள்ள கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி, பின் 1 மணிநேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு நன்கு தலைமுடியை அலச வேண்டும்.

இதை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தி வர, பொடுகுத்தொல்லையை வேகமாக ஒழித்துவிட முடியும்.