Home அந்தரங்கம் பெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..!!

பெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..!!

50

 

பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதே அவர்கள் அணியும் உடைதான். அதனால்தான் ஆள்பாதி, ஆடைபாதி என்கின்றனர். உடுத்தும் உடையில் நளினம் இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். ஒரு சிலர் அழகான உடையைக்கூட உடுத்தத்தெரியாமல் உடுத்து அதன் அழகையே குலைத்து விடுவார்கள்.

ஒரு சிலர் சாதாரண காட்டன் புடைவையை கூட அழகாக உடுத்து அப்லாஸ் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். எந்த உடையை எங்கு உடுத்த வேண்டும் என்பது ஒரு சிலருக்கு தெரிவதில்லை. நமக்கு என்ன உடை சரியாக இருக்கும் என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர் அவர்களுக்காகவே இந்த கட்டுரை.

அம்சமாய் அணியலாம்

உடலை மறைக்கத்தான் ஆடை என்றாலும் உடல் முழுவதும் சுற்றிக்கொள்வதற்காக மட்டுமல்ல ஆடை. அதிலும் ஒரு அழகியல் உண்டு. அதற்காக அங்கங்கள் தெரியும் அளவிற்கு குறைவான ஆடைகளை அணியக்கூடாது. அது நம்முடைய நன்மதிப்பை குறைத்துவிடும்.

அதிகரிக்கும் அழகு

புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும். உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமை பார்ப்பவர்களுக்கு தோன்றும்.

புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள். எனவே நமக்கான உடை என்ன என்பதை தேர்ந்தெடுத்து உடுத்தவேண்டும். நண்பர்கள் சொல்லி விட்டார்களே என்று எடுப்பதோ, பிறருக்காக நமக்கு பொருத்தமில்லாத உடையை உடுத்துவதோ நமது அழகினை கெடுத்துவிடும்.

எங்கெங்கு என்ன உடை

வீட்டிற்குள் இருக்கும் போது பாதி நேரம் சமையலறையிலும், வீட்டு வேலை செய்யவும் சரியாகிவிடும். அதற்காக சரியில்லாத உடை உடுத்த வேண்டும் என்றில்லை. வீட்டிலும் பாந்தமாய் உடுத்தியிருந்தால் மனதிற்கும் இதமளிக்கும்.செய்யும் வேலையிலும் ரசனை கூடும்.

கடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது மிதமான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது நலம்.

சூழ்நிலைக்கு ஏற்ப புடவை

அலுவலகங்களுக்கோ, பள்ளி கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணியவேண்டும் என்பதில்லை. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம்.

இறுக்கமான உடைகளை தவிர்க்கலாம்

மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது.

புடவைக்குப் பொருத்தமான சோளிகள் பெண்களின் கைகளில் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும் கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.