Home உறவு-காதல் பெண்கள் திருமணம் செய்து கொள்ள தயங்குவது ஏன்?

பெண்கள் திருமணம் செய்து கொள்ள தயங்குவது ஏன்?

97

திருமணம் என்றாலே சில பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். தனிப்பட்ட காரணம் ஏதேனும் வைத்து தான் பெண்கள் தங்களது திருமணத்தை தள்ளிப் போட பார்கிறார்கள்.

புதிய இடத்திற்கு செல்ல பயப்படுவது, தன் தனிமை மற்றும் தனிப்பட்ட பக்கத்தை மற்றொரு நபருடன் பகிர்ந்துக் கொள்ள தயங்குவது, இலட்சியங்கள் நிறைவேறும் வரை திருமணம் வேண்டாம் என உறுதிக் கொள்வது என பெண்கள் திருமணம் வேண்டாம் என கூறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன…

புகுந்த வீடு, புது நபர்கள், புதிய உறவுகள், புதிய இடம். எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்கள், நமது நடவடிக்கை, குணாதிசயங்ககளை ஏற்றுக் கொள்வார்களா என்ற பல கேள்விகள் பெண்களின் மனதில் எழுகின்றன.

சில பெண்கள் தனியாக வாழ தான் விரும்புவர்கள். அவர்களால் நண்பர்களுடன் இருக்கும் அளவிற்கு, மற்றொரு தனி நபருடன் தன் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள முடியாது என எண்ணுவார்கள். இந்த எண்ணம் குறையும் வரை அவர்களுக்கு திருமணம் என்றால் அலர்ஜி போல தான் தோன்றும்.

ஆண்களை போலவே பெண்களுக்கும் நிறைய இலட்சியங்கள், குடும்ப பொறுப்புகள் இருக்கும். இவை நிறைவேறும் வரை திருமணத்தை தள்ளி போடலாம் என எண்ணலாம்.

சில பெண்கள் திருமணம் செய்துக் கொண்டால் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருக்கும், தங்களது சுதந்திரம் பறிபோய்விடும், தனித்து எந்த செயலையும் ஈடுபட முடியாது என கருதி திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள்.

வீட்டை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும். பெற்றோருக்கு அவர் ஒரே பெண்ணாக இருப்பார். நாம் திருமணம் செய்துக் கொண்டால், அப்பா, அம்மாவை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தின் காரணத்தினாலும் கூட சில பெண்கள் திருமணத்தை தள்ளிப் போடுவது உண்டு.

தாம்பத்தியம் அல்லது இல்லறம் சார்ந்த உறவில் நாட்டம் குறைவாக இருப்பது. பெற்றோர், சகோதர, சகோதரிகளை பிரிய மறுப்பது போன்றவையும் கூட பெண்கள் திருமணத்தை கண்டு பயப்படுவதற்கும், தள்ளிப் போடுவதற்குமான காரணமாக இருக்கின்றன.