Home பெண்கள் பெண்கள் தாய்மை அடைந்துள்ள போது, ஆண்கள் கண்டிப்பாக செய்ய கூடாதவை

பெண்கள் தாய்மை அடைந்துள்ள போது, ஆண்கள் கண்டிப்பாக செய்ய கூடாதவை

153

தாய்மையுற்ற காலங்களில் பெண்களுக்கு உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனநலமும் முக்கியம். கருவுற்ற பெண்ணும் அவரது உறவினர்களும் உடல் நலத்தில் காட்டும் அதே அக்கறை, அவள் மன மகிழ்ச்சியுடன் உள்ளதில் உறுதிபடுத்தி கொள்கிறார்களா என்றால் சந்தேகமே!

Pregnancy love care உதாரணத்திற்கு ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்கிறேன். போதிய ஊட்டச்சத்து இல்லாத கருவுற்ற பெண்ணை, மருத்துவர் சரியான விகிதத்தில் போதுமான உணவு எடுத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் சிரமம் என எச்சரித்து அனுப்பவே, அது முதல் அந்த பெண்ணின் கணவர் அவளிடம் ஹாஸ்டல் வாடன் போல கண்டிப்புடன் நடந்து கொள்கிறார். இப்படி அக்கறை என்ற பெயரில் இம்சிப்பதும் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என சிந்திக்க மறந்து விடுகிறோம். கருவுற்ற பெண்ணின் மனநலம் என்பது கணவனின் கவனிப்பில் மட்டுமே சாத்தியம். கவனிப்பு, அன்பு என்ற பெயரில் கண்டிப்புடன் இருந்தால்?

நான்காவது மாதம் முதல் ஏழாவது மாதம் வரை மென்மையான உறவு அவசியம். இது பிரசவத்தின் போது, இடுப்பு எலும்பை விரிந்து கொடுக்க செய்யும். இதை பொறுத்தவரையில் மருத்துவரின் அறிவுரையை கேட்டு செயல்படலாம்.

சிலர் வெளிநாடுகளில் பணிபுரிவோர் எந்த முக்கியமான வேலையாக இருந்தாலும், அதை விட்டு பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்கும்படி சூழலை அமைத்து கொள்ளலாம். இந்த தருணத்திற்கு எவ்வளவு சம்பாதித்தாலும் ஈடு கொடுக்க முடியாது. குறிப்பாக குழந்தையை கையில் ஏந்தும் அழகிய தருணத்தை எந்த அப்பாவும் இழந்து விட கூடாது. இப்படி மேலே பட்டியலிட்டுள்ள சிலவற்றில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்