Home உறவு-காதல் பெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்

பெண்கள் சொல்கிறார்கள் ஆண்களுக்கு காதல் உறவு தெரியாதாம்

155

ஆண் பெண் உறவு:ஆண்களுக்கு காதலிக்க தெரியாது, பெண்களுக்கு காதலிக்கவே தெரியாது.. என்று இந்தகால இளைஞர்களிடம் இயற்கையாகவே இருக்கிறது. ஆனால் காதல் காமம் ஆகிய இரண்டிற்கும் வித்தியாசங்கள் இருப்பது இருவருக்கும் தெரிவதில்லை. இதனால் பல பிரச்சனைகளால் பிரிவையும் சந்திக்கின்றனர்.

பெண்களுக்கு ஆண்களை விடவும் அதிக ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன்கள் இருக்கின்றன. இதனால் உடலில் புது மாற்றத்தால் காதலின் ஈர்ப்பை அதிகமாக வளர்க்கிறது. காதலனை எண்ணி பெண்கள் ஏதாவது ஒரு செயலை செய்தாலோ, ரசித்தாலோ ஆக்ஸிடோசின் அளவு அதிகரிக்கும்.

ஆனால் இதுவே ஆண்களுக்கு முற்றிலும் வேறுபடும். பாலியல் உணர்ச்சிகள் அதிகமாக சுரக்கவைக்கும் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் பெண்களின் ஹார்மோனைவிட உடலில் 20 மடங்கு அதிகமாக சுரக்கும்.

பாலியலில் ஆண்களைவிட பெண்களுக்கு விருப்பம் குறைவு தான். பெரும்பாலும் தன்னுடன் அதிகமாக செலவிட்டு, மகிழ்ச்சியோடும், இன்ப, துன்ப நேரத்தில் ஆறுதலாக இருக்கும் காதலையே விரும்புவார்கள். பெண்களை பொறுத்தவரை பாலியல் இன்பம் என்பது மனம் சார்ந்தது, மன உணர்ச்சி சார்ந்த ஆசைகளாக தான் இருக்கும்.

ஆனால் ஆண்களுக்கு பாலியல் இன்பம் என்பது அடிப்படை உடல்சார் தேவையாகவும், உடலில் பாலியல் உணர்ச்சியைத் தொடர்ந்து தூண்டும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாகவும் அமைகிறது. ஆண்கள் பாலியல் இன்பத்தை தனக்கு சக்தி தரும் ஆற்றல் மூலமாகவும், தனது காதலை தெரிவிக்கும் ஒரு கருவியாகவும் கருதுகின்றனர்.

எப்படிபட்ட காதல் பெண்கள் விரும்புகிறார்கள் என்றால்,

காதலின் ஆரம்பநிலையில் அவர்கள் தனது மனதினுள் நுழையாத காதலனோடு பாலியல் உறவில் ஈடுபட மறுக்கிறார்கள். அது ஆண்களுக்கு தெரிவதில்லை. காதலர்களுக்கு பாலியல் உள்ளுணர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும் போது அது வெளிப்படுத்தும் உணர்ச்சி மனதைக்களிப்பூட்டி கிளர்ச்சியடையச் செய்கிறது.
தான் நேசித்த காதலன் உடல், மனம் ஆகியவற்றில் இணைந்து, அவனை தனது வாழ்க்கையாக எண்ணி வேறு ஓர் ஆண்மகனை மனதில் நினைக்கக்கூடது என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்கள்.
பாலியல் உணர்ச்சி என்பது ஆண்களின் தவறல்ல- அது அவர்களின் மரபணுக்களின் வெளிப்பாடு.
ஆண்களின் பாலுறவு ஆர்வமும், பெண்களின் பாலுறவு ஆர்வமும் வித்தியாசமானது.

இவர்களில் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. ஆனால், இருவரும் வேறுபட்டு, மாறுபட்டு காணபடுவார்கள்.