Home அந்தரங்கம் பெண்கள் ஆணின் எந்த மாதிரியான உரையாடலை விரும்புவார்கள்? இப்படியெல்லாம் பேசும் ஆணை பெண்கள், தேடித்தேடி வந்து...

பெண்கள் ஆணின் எந்த மாதிரியான உரையாடலை விரும்புவார்கள்? இப்படியெல்லாம் பேசும் ஆணை பெண்கள், தேடித்தேடி வந்து பேசுவார்களாம்!

496

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என சில இடங்களில், எப்போதுமே ஒரு ஆண் மட்டும் ‘கோபியர் கொஞ்சும் ரமணா’ என்பது போல எப்போதும் அவரை சுற்றி ஒரு பெண்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். பெண்களும் தேடி தேடி வந்து பேசுவார்கள். இப்படி பெண்கள் தேடி சென்று ஆணிடம் உரையாடுகிறார் என்றால் அந்த நபரிடம் பேசும் போது, பிடித்தமானதாக உணர்ந்தால் மட்டுமே தேடி சென்று பேசுவார்கள். அப்படி பெண்களுக்கு பிடித்த உரையாடலை நீங்க மேற்கொள்ள விரும்பினால் ஒரு சில ஏரியாக்களை ஸ்கிப் செய்ய வேண்டும்.

சில பெண்கள் உடல் பருமனாக இருப்பார்கள் அவர்களிடம் உடல் எடை குறித்து பேசினால் உங்க பக்கமே திரும்ப மாட்டார்கள். உரிமையாக பேசுவதையும் அடக்குமுறையோடு பேசுவதையும் பெண்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் அவர்களிடம் பேசும் போது, உரிமையாக பேசுகிறேன் என நினைத்து கொண்டு, அவர்களிடம் அடக்கி பேசாதீர்கள். பிறகு சிக்கிகொள்வீர்கள்.

பெண்களது சின்ன சின்ன விஷயங்களை பாராட்டி பாருங்கள். உங்களுக்கு அவர்களது மனதில் தனி இடம் இருக்கும். அதே போல சும்மா எதற்கெடுத்தாலும் பர்ராட்டி கொண்டே இருந்தால், உங்களது செயற்கையான புகழ்ச்சியை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். சிலர் நகைச்சுவை உணர்வை காட்டுகிறேன் என கூறிக்கொண்டு, பெண்களையோ அல்லது சுற்றியுள்ள சிலரையோ வைத்து காமெடி செய்வார்கள். அது சிரிக்கும்படி இருந்தாலும், யாரையாவது நோகடிக்கும்படி இருந்தால் கண்டிப்பாக உங்களை ரசிக்க மாட்டார்கள். பெரும்பாலும் கிண்டல் செய்யாத நகைச்சுவையை தான் விரும்புவார்கள். சிலர் டபுள் மீனிங்கில் ஜோக் அடித்துவிட்டு, சத்தம் போட்டு சிரிப்பார்கள். இப்படி ஒரு கேவலமான ஜோக்கா? என பெண்கள் சங்கடப்படும்படி காமெடி செய்பவர்களை பெண்கள் விரும்பவே மாட்டார்கள்.

அடுத்து ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகிவிட்டாலே சிலர் “டி போட்டு அழைப்பார்கள். நெருக்கமான நட்பு வட்டாரத்தில் உள்ள பெண்களிடம் இப்படி “டி” போட்டு அழைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சில பெண்கள் இதனை கண்டுகொள்ளாவிடினும் பல பெண்களுக்கு இப்படி அழைப்பது எரிச்சலடைய மட்டுமே செய்யும்.

காதலர் அல்லது கணவர் யாராக இருந்தாலும், குடித்து விட்டு பேசினால் பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. குடித்துவிட்டு திட்டினாலும் சரி, கொஞ்சினாலும் சரி அவர்களது போதைக்கு பெண்கள் தான் ஊறுகாயா? அடுத்து பெண்கள் கொஞ்சம் டென்ஷனாகி பேசினாலே, பீரியடா என கேட்பது. என்னமோ இருந்துட்டு போகுது உங்களுக்கு என்ன? அதை தெரிந்து என்ன செய்வீர்கள்? என்ற மைண்ட் வாய்ஸ் பெண்களுக்குள் எழும். நாகரீகம் கருதி மழுப்பிவிட்டு சென்றுவிடுவார்கள்.

அடுத்து புரளி பேசும் ஆண்கள் பக்கம் பெண்கள் திரும்பவே மாட்டார்கள். அடுத்து எதற்கெடுத்தாலும் பெண்களை திட்டுவது, சாலையில் வண்டி ஓட்டும்போது, விபத்து ஏற்பட்டால் கூட முதலில் பெண்ணை குறை சொல்வது. அது போன்ற ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காதாம். இப்படி ஆண்கள் எப்படி பேசினால் பிடிக்கும், பிடிக்காது என்பதை பட்டியலிட்டுவிட்டேன். எல்லாமே பலரின் அனுபவம்! மேற்படி ஆக வேண்டியதை பார்த்துக்கொள்ளுங்க!