Home உறவு-காதல் பெண்களே! தப்பித்தவறி கூட இந்த மாதிரியான ஆண்களிடம் காதலில் விழுந்துடாதீங்க…

பெண்களே! தப்பித்தவறி கூட இந்த மாதிரியான ஆண்களிடம் காதலில் விழுந்துடாதீங்க…

25

சிறந்த ஆணுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான சரியான ஆண் கிடைக்கும் வரை சில தவளைகளுக்கு தான் நீங்கள் முத்தமிட்டு கொண்டிருக்க வேண்டும். அதற்கு காரணம் சில வகை ஆண்கள் நீங்கள் என்ன தான் செய்தாலும் உங்களை திருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள். அந்த தருணத்திற்கு சிலர் அப்படி நடந்து கொள்வார்கள்.

காலப்போக்கில் சிலர் மாறலாம், சிலர் மாறாமலேயே இருக்கலாம். ஆனால் அவர்கள் மனது மாறி உங்களை திருமணம் செய்யும் வரை நீங்கள் காத்திருப்பது உங்களது கடமை அல்ல. உங்களை வேண்டாம் என கூறும் இவ்வகை ஆண்களை நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காரணம் அவர்களுக்காக காத்திருந்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

“திருமணம் வரை செல்லும் உறவு வேண்டாம்” என்ற ஆண்கள் இவ்வகை ஆண்கள்

கண்டிப்பாக உங்களை திருமணம் செய்ய மாட்டார்கள்.அவர்களுக்கு அதிகமாக டேட்டிங் செல்ல வேண்டும். அந்த உறவு தீவரமடைந்து திருமணம் வரை செல்லும் போது அவர்களுக்கு பயம் ஏற்பட்டு, இன்னும் திருமணத்திற்கு அவர்கள் தயாராக இல்லை என கூறி, அந்த உறவை அப்படியே துண்டித்து விடுவார்கள். சொல்லப்போனால் அவர்கள் என்றுமே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களை மாற்ற முயற்சிப்பதிலும், நீங்கள் அவருக்கு சரியானவர் என்பதை புரிய வைப்பதிலும் எந்த ஒரு பிரயோஜனமும் இருக்க போவதில்லை. அவர் மீது வெறிக்கொண்டு உள்ளீர்கள் என்ற பிம்பத்தை உங்கள் மீது உண்டாக்கி விடும். உங்களை தவிர்க்கும் ஒரு ஆணின் பின் செல்வதால் உங்கள் ஆற்றல் திறன் தான் வீணாக போகும்.

“பழைய காதலியின் மீது நாட்டம்”

இவ்வகை ஆண்கள் நீங்கள் எதிர்ப்பார்ப்பவர்கள் கிடையாது. அதனால் இவர்களை நீங்கள் தவிர்த்து விடுவது நல்லது. இவ்வகை ஆண்கள் இன்னமும் தன் பழைய காதலியின் நினைவிலேயே இருப்பார்கள். ஆனால் அதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எப்போதும் அவளை பற்றி, அவளின் பொழுது போக்குகள், ஆசைகள், அவளுடம் சேர்ந்து செய்த செயல்கள் ஆகியவைகளையே பேசி கொண்டிருப்பார்கள். இவ்வகை ஆண்களுக்கு தங்கள் பழைய காதலை மறக்க இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும். அதனால் உங்களை திருமணம் செய்ய கண்டிப்பாக அவர் தயாராக இருக்க மாட்டார்.

“தன் தொழிலில் அதிக கவனம் கொண்டவர்”

இவ்வகை ஆண்கள் தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும் என்று தான் அதிகமாக நினைப்பார்கள். அதனால் தன் வேலை/தொழில் ரீதியான அனைத்து விஷயத்தில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்துவார்கள். உங்களுக்காக நேரம் செலுத்த அவருக்கு நேரமே இருப்பதில்லை. எப்போதுமே வேலை தான் அவருக்கு முக்கியமாக இருக்கும். “ஆண்கள் தங்கள் வேலை அல்லது தொழிலில் ஆண்கள் நல்ல நிலைக்கு வந்திருக்க வேண்டும் அல்லது அந்த நிலைக்கு வர எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்” என்று திருமண பொருத்தம் பார்க்கும் வல்லுநர் சமந்தா டானியல் கூறியுள்ளார்.

“எப்போதும் சிறந்தவைகளை தேர்ந்தெடுப்பது”

இவ்வகை ஆண்களுடன் பழக நன்றாக இருக்கும், ஆனால் கடைசி வரை அவர் உங்களை தேர்ந்தெடுக்க மாட்டார். காரணம், நீங்களே சிறந்தவாராக இருந்தும் கூட, உங்களை விட வேறு ஒருவர் சிறந்தவராக இருக்க கூடும் என்று தேடிக் கொண்டே இருப்பார். உங்களை விட சிறந்த ஒருவர் இவ்வுலகத்தில் எங்காவது இருப்பார் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கும். அவருக்கு நீங்கள் சரியானவர் என்ற எண்ணம் இல்லாதவருடன் நீங்கள் ஏன் வாழ வேண்டும் பெண்களே!

“தன் வயதிற்கு பாதி உள்ள பெண்களுடன் சுற்ற விரும்புவது”

பொதுவாக இவ்வகை ஆண்களுக்கு வயது 40-க்கு மேல் இருக்கும். நல்ல பதவியுடன் நல்ல நிலையில் இருக்கும் இவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி பருவ நண்பர்கள் இந்நேரத்திற்கு திருமணம் செய்து குழந்தை குட்டி என இருப்பார்கள். இவர்களோ தன்னை விட பாதிக்கு பாதி குறைவான வயதில் உள்ள பெண்களோடு சுற்ற நினைப்பார்கள். எப்போதும் பார்டி, க்ளப் என்ற சுற்றி சின்ன வயது பெண்களை தேடி அலைவார்கள். உண்மை என்னவென்றால் அவர்கள் அவர்களிடமே பொய் சொல்லிக் கொண்டிருக்கார்கள்; காரணம் அவர்களுடன் சுற்றும் பெண்கள் அவரின் மீது உள்ள ஈர்ப்பால் அவருடன் சுற்றுவதில்லை; மாறாக அவருடைய பணத்திற்காகவே அவருடன் சுற்றுவார்கள்.

“இன்னும் சரியான பெண்ணை காணவில்லை”

இவ்வகை ஆண்கள் பொதுவாக 30 வயதை கடந்திருப்பார்கள். மேலும் இது நாள் வரையில் திருமணமும் நடந்திருக்காது. காரணம் இது வரையில் சரியான பெண்ணை நான் காணவில்லை என்றே அவர்கள் கூறுவார்கள். உங்களிடமே சில கேள்விகளை நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். இது வரையில் அவர் பார்த்த நூற்றுக்கணக்கான பெண்கள் அவருக்கு சரியானவர்களாக இல்லையென்றால் நீங்கள் மட்டும் எப்படி இருப்பீர்கள் என்பதே அதற்கு காரணம். கவனமாக இருந்து உங்கள் உணர்ச்சிகளை பாதுகாத்திடுங்கள்.

“என் குழந்தைகளை மட்டுமே நான் பார்த்துக் கொள்வேன்”

ஒரு சிறந்த தகப்பன் என்ற முறையில் இவ்வகை ஆண்கள் உங்கள் காதலை அடையலாம். தன் குழந்தைகளின் மீது அவர் வைத்திருக்கும் காதல், அவர் மீது ஈர்ப்பை உண்டாக்கலாம். தன் குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க அவர் மேற்கொள்ளும் தியாகங்கள் உங்களை அதிசயக்க வைக்கலாம். அதனால் இவர் தான் உங்களுக்கான சரியானவர் என்றும் நினைக்க வைக்கலாம். தவறாக நினைக்காதீர்கள்! பொறுப்பான தகப்பன் என்ற விஷயத்தில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் இவ்வகை ஆண்கள் தங்கள் கவனத்தை குழந்தைகளின் மீதே அதிகமாக செலுத்தும் போது, உங்களுடனான உறவிற்கு போதிய நேரத்தை ஒதுக்குவதில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் அவர் இதயத்தில் உங்களுக்கு ஓர் இடம் கிடைக்குமா என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். நீங்கள் என்ன தான் செய்தாலும் உங்களை திருமணம் செய்யாத ஆண்களில் முக்கியமான வகைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். இந்த பட்டியல் கண்டிப்பாக முழுமையானது கிடையாது. உங்களுக்கு தெரிந்த வகைகள் இன்னும் ஏதேனும் உள்ளதா? கூறுங்களேன்!