Home உறவு-காதல் பெண்களே! சரியான காதலனை / கணவனை தேர்ந்தெடுப்பது எப்ப‍டி?

பெண்களே! சரியான காதலனை / கணவனை தேர்ந்தெடுப்பது எப்ப‍டி?

27

அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பெண்கள் இவ்விஷயத்தில்
பெரிதும் தயக்கம்காட்டுவார்கள். ஆனா ல் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமில் லை. இவ்விஷயத்தில் இளம் பெண்களு க்கு உதவும் சில குறிப்புகள்…
1. புதிய மனிதர்களைச் சந்தியுங்கள்
அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய இளம்பெண்களில் 52% பேர் தமக்கு ஏற்ற துணையை அ றிவதற்காகவே உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள், திருமணங்களுக்கு ச்செல்கிறார்கள். ஆனால் அங்கே சரியான நபரைக் கண்ட பிறகு நே ரே போய் பேசிவிடுகிறார்களா என்ன? ஜாடைமாடை யாகப் பார்க்கிறார்கள், புன்னகைக்கிறார்கள், கிசு கிசுக் கிறார்கள்… ஆனால் ஓரக்கண் ணால் பார்ப்பதை விட நேரே போய் பார்த்துப் பேசிவிடலாமே? நீங்கள் மிகவும் கூச் ச சுபாவம் கொண்டவர் என்றால் உங் கள் தோழியையோ, உறவி னரையோ தூது செல்லப்பயன்படுத்திக் கொள்ளு ங்கள்.
2. சுற்றி வளைக்காதீர்கள்
இந்தியப் பெண்களில் 23 சதவீதம் பேர் `தங்கள் ஆளு க்கு’ பொறாமை ஏற்பட வேண்டும் என்பதற்காக வேறு சிலருடன் நட்பு வைத்துக் கொள்கிறார் களாம், அல்லது அப்படிக் காட்டிக்கொள் கிறார்களாம். ஆனால் மலரும் ஓர் உற வுக்கு அதுவே எதிரியாகிவிடலாம். நீங் கள் ஏவும் ஏவுகணையைத்தானே நீங்க ள் விரும்புபவருமë ஏவுவார்?
3. நேர்மையாக இருங்கள்
இந்திய இளம்பெண்களில் 15 பேர் தாங்கள் ஏற்கனவே ஒரு நட்பில், காதலிலிருந்து பிரிந்து மனம் நொந்திரு ப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு. எல்லாம் தாங்கள் விரும்புவரின் அனுதாபத்தைச் சம்பா திக்கத்தான். ஆனால் ஒருபுதிய உறவு க்கு முன்னுரை எழுதும்போதே அது முடிவுரை எழுத வைத்துவிடலாம். காரணம் ஆண்கள் சிக்கலான உறவுக ளைத் தவிர்க்க விரும்புவதுதான்.
4. எதிர்காலத்தைப் பாருங்கள்
இந்தியப் பாரம்பரியப்படி பெரும்பாலான பெண்கள் (89%பேர்) முதலில் தோன்றும் ஒரே காதல்தான் உண் மையானது என்று கருதுகிறார்களாம். அதில் தவறில்லை. ஆனால் முதல் காதல் சொதப்பலாகி விடும்போது அதிலேயேதேங்கி நிற்கவேண்டும் என்பதில்லை. கடினமானது என்ற போதும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தா க வேண்டும்.
5.`முதல் பார்வையிலேயே’ சரியாகா து
`பார்த்த முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துப் போனது’ என்பதெல்லாம் சினிமாவுக்குத் தான் பொரு ந்தும். ஆனால் சினிமாவின் தாக்கத்தாலோ என்னவோ, அதிகமான பெண்கள் (63%மானவர்கள்) முதல் பார் வையில் ஏற்படும் காதலுக்கு முக்கியத் துவம் அளிக்கிறார்கள். கண்ணை மூடி க்கொண்டு காதலில் விழக் கூடாது.
6. அவரது நண்பர்களை அவர் தேர்ந்தெடுக்கட்டும்

தமது `நபர்’, தம் தோழியருடனும், குடு ம்பத்தினருடனும் நன்றாகப்பழக வே ண்டும் என்று எதிர்பார்ப்பது பெண்க ளின் இயல்பு. சில ஆண்கள் அதை அதிகமாக விரும்பாதவர்களாக இருக் கலாம். ஆனால் பொதுவான நிகழ்ச் சிகள், குடும்ப விழாக்களில் இயல்பா கப் பேசக்கூடும். எனவே `உங்களவரி ன்’ நடத்தை, குணத்தை மட்டும் பாருங்கள். உங்களு க்கு நெருங்கியவர்களுட ன் எப்படிப் பழகுகிறார் என்ற அளவுகோலை மட்டும் வைத்துக் கொண்டு உங்கள் அன்புக்குரியவ ரை எடை போடாதீர்கள்.
7. நடைமுறை சார்ந்தவராக இருங்க ள்
உங்கள் நபர் `சூப்பர்மேனாக’ இருக் க வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். எல்லா வகையிலும் திருப்தியா ன நபரை ஐந்தாண்டுகளாகத் தேடுவதாக 12% இந்தியப் பெண்கள் கூறியிருக்கிறார் கள். உங்களவரின் தலையில் எதிர்பார்ப்பு ச் சுமைகளை ஏற்றாதீர்கள். அளவுக்கு அதி கமான எதிர் பார்ப்பு உறவின் இயல்பை, உண்மைத் தன்மை யைப் பாதிக்கும்.