Home பாலியல் பெண்களே அந்தரங்கப்பகுதிகளில் அலர்ஜியா?

பெண்களே அந்தரங்கப்பகுதிகளில் அலர்ஜியா?

26

downloadபெண்களுக்கு அந்தரங்கப்பகுதிகளில் வரும் பிரச்சனைகளை வெளியே சொல்வதில் மிகுந்த தயக்கம் இருக்கும். இதற்காகவே மருத்துவரிடம் செல்லாமல் நாட்களை கடத்துவார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை ஒத்திப் போடாமால் கையோடு அதனை கவனிப்பது அவசியம்.

பிறப்புறுப்பில் சிலருக்கு மரு போல சிறி சிறு கொப்புளங்கள் வரும். இது வைரஸினால் உண்டாகும் தொற்று. இதனால் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாகும். அதை அப்படியே விட்டால் மேலும் அந்த தொற்று பரவி, தீவிர பிரச்சனையை தரும்.

சிறு கொப்புளங்களுக்கு காரணமான வைரஸை கொல்லும் ஆற்றல் ஆப்பிள் சைடர் வினிகருக்கு உள்ளது. ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு பஞ்சினால் நனைத்து, கொப்புளங்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு காலை மாலை என இரு வேளை செய்தால் ஓரிரு நாட்களிலேயே கொப்புளங்கள் மறைந்து அதனால் ஏற்படும் அரிப்பு, வலி போன்ற பிரச்சனைகள் தீரும்.

தேயிலை மர எண்ணெய் ஒரு ஆன்டி செப்டிக். கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளவை. இவை கொப்புளங்கள் மீது மட்டுமே செயல்படும். சருமத்தை சிறிதும் பாதிக்காது. தேயிலை மர எண்ணெய் செறிவு மிகுந்தவை. இதனை நீர்த்த நிலையில்தான் உபயோகிக்க வேண்டும். எனவே அதனை, சம அளவு நீரில் கலந்து, கொப்புளங்கள் மீது பஞ்சினால் தடவுங்கள். விரைவில் கொப்புளங்கள் மாயமாய் மறைந்துவிடும். எரிச்சல், அரிப்பும் காணாமல் போகும்.

வெங்காயச் சாறில் சிறிது உப்பு சேர்த்து, அந்த இடத்தில் வரும் கொப்புளம் மீது தடவினால், கொப்புளங்கள் ஆறிவிடும். உப்பிலும் ஆன்டி செப்டிக் குணங்கள் உள்ளதால் சீக்கிரம் பலன் கிடைக்கும்.