Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களுக்கு ஒருமணி நேர உடற்பயிற்சியே போதுமானது

பெண்களுக்கு ஒருமணி நேர உடற்பயிற்சியே போதுமானது

26

• நேர வசதிக்கேற்ப, உங்களுக்கு பொருந்தக்கூடிய சில உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, வாரத்திற்கு இரண்டு முறை 20 நிமிடங்களுக்கு தசை வலுவூட்டும் பயிற்சிகள் சிலவற்றை செய்வது நல்லது அல்லது இடைவேளைப் பயிற்சியாக நடைப்பயிற்சி அல்லது மெது ஓட்டம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை உடற்கட்டுக்கு ஒரு புதுப்பொலிவை அளிக்கும்.
• வேலைக்கு போகும் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுவதில் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலை உணவில் புதிதான பழ வகைகளை சேர்த்துக் கொள்வது சிறந்தது. இதனால் பழங்களில் உள்ள குளுக்கோஸ் உடலின் இனிப்பு வேட்கையை பூர்த்தி செய்துவிடும்.
• 3-5 பவுண்டு எடையுள்ள ‘டம்பெல்’களை பிடித்தபடி 15 நிமிடங்களுக்கு டிரட்மில்லில் பயிற்சி செய்யுங்கள். மேலும் உடலுக்கேற்ப வேகத்தை செட் செய்து கொள்ளுங்கள்.
Slider-3• கிரஞ்ச் எனும் அடிவயிற்று உடற்பயிற்சியின் போது பெரும்பாலான பெண்கள் கழுத்து தசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றனர். இது மிகவும் தவறான, எந்த பலனையும் கொடுக்காத ஒரு முறையாகும். மாறாக அடிவயிற்று தசைகளில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். மேலும் கிரஞ்ச் உடற்பயிற்சியை துவங்கும் முன்னர், நாக்கால் வாயின் மேலண்ணத்தை நன்கு ஈரப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
• உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி செய்முறைகள் போன்றவற்றின் பட்டியலோடு, எந்த அளவுக்கு வெற்றிகரமாக அவற்றில் ஈடுபட்டீர்கள் என்பதை குறித்துக் கொள்ள ஒரு குறிப்பேட்டை பயன்படுத்துங்கள். அதில் நீங்கள் புதிதாக மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், கால கட்டம், தேவைப்படும் எச்சரிக்கைகள் போன்றவற்றை பதிவு செய்து கொள்ளுங்கள்
• பெண்களை பொறுத்தவரையில் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்முறைகள் போதுமானது. எனவே அதிக நேரம் ஜிம்மில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது களைப்பையும் சோர்வையும் ஏற்படுத்திவிடும்.
• எப்போதுமே ஒரு திட்டமிட்ட ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். எனவே காலை உடற்பயிற்சி நேரத்தில் ஏதேனும் திடீர் விஷயம் குறுக்கிட்டால், அதனை இயல்பாக சமாளித்துக் கொள்ளுங்கள். தவறவிட்ட உடற்பயிற்சியை அந்த நாளின் பிற்பகுதியில் முடிக்கலாம் என்று நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.