Home பாலியல் பெண்களுக்கு அந்த மூன்று நாட்களில் உண்டாகும் வலியை போக்கும் இயற்கை வைத்தியம்…

பெண்களுக்கு அந்த மூன்று நாட்களில் உண்டாகும் வலியை போக்கும் இயற்கை வைத்தியம்…

28

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் அடையும் அவஸ்தைகளுக்கு அளவே கிடையாது. மாதத்தின் 27 நாட்களும் பம்பரமாக சுழலும் அவர்களை அந்த மூன்று நாட்கள் மட்டும் வாரிச்சுருட்டி மூலையில் உட்கார வைத்து பலவீனமாக்கிவிடும்.

சிலர் அந்த வலியைப் பொருத்துக் கொள்வார்கள். சிலர் உருண்டு கதற ஆரம்பித்துவிடுவார்கள். அதற்காக சிலர் மருந்துக்கடைகளில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதுண்டு.

அவை தாற்காலிகமாக வேண்டுமானால் வலியைக் குறைக்கும். ஆனால் பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும். அதற்கு பதிலாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய உணவே மருந்து முறையைப் பின்பற்றுவது தான் ஆரோக்கியத்தையும் நிரந்தரத் தீர்வையும் தரும்.

மாதவிலக்கு வலியைப் போக்க என்ன செய்யலாம்?…

முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர, அதிகப்படியான ரத்த அழுத்தம் சமநிலைப்படும்.

முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய், தேவையான உப்பும் சேர்த்து ‘சூப்’ போல செய்து பருகி வந்தால் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும்.

முருங்கைப் பட்டை, வெள்ளைக்கடுகு. பெருங்காயம் இவற்றை நன்கு அரைத்து சூடாக்கி கொஞ்சம் வெதுவெதுப்பான நிலைக்கு வந்தபின், வலி உள்ள இடத்தில் தடவ வலி குறையும்.