Home பெண்கள் பெண்குறி பெண்களின் பிறப்பு உறுப்பு வெவ்வேறு வடிவத்தில் இருக்கும்

பெண்களின் பிறப்பு உறுப்பு வெவ்வேறு வடிவத்தில் இருக்கும்

48

180392562பெண்களின் பிறப்பு உறுப்பின் உட்பக்கமாக ஒரு இஞ்ச் தூரத்தில் இந்தக் கன்னித்திரை இருக்கிறது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க மேல்ப க்கம் ஒரு ஃபாயில் பேப்பர் மாதிரி ஒட்டி வைக்கிறார்களே… அது மாதிரி மெல்லிய சவ்வு இது!
இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும். பொதுவாக பிறைநிலா மாதிரி பெரும் பாலானவர்களுக்கு இருக்கும். மாதவிடாயின்போது இரத்தம் வெளியேறுவதற்காக இந்த வடிவம். சில பெண்களுக்குக் கன்னித் திரை சுத்தமாக மூடியிருக்க, மாதவிடாயின்போது இரத்தம் வெளியில் வராமல் அப்படியே அடைத்துக் கொள்ளும். அவர்களுக்கு ஆபரேஷன் செய்து கன்னித் திரையை அகற்றுவார்கள். இல் லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். கன்னித் திரையை அகற்றப் போகிறோம் என சொல்லிவிட்டுத்தான் இந்த ஆபரேஷனை டாக்டர்கள் செய்வார்கள். பின்னால் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்ற அக்கறைதான் காரணம்!

வேடிக்கை என்னவென்றால், பிளாஸ்டிக் சர்ஜரி மகத்தான வளர்ச்சி கண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஏதோ கண்ணில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவது மாதிரி பெண்களுக்குக் கன்னித்திரையைக்கூட புதிதாகப் பொருத்துகிறார்கள்.
திருமணத்துக்கு முன்பாக இதை யார் வேண்டுமானாலும் ஆபரேஷன் மூலம் பொருத்திக் கொள்ளலாம். இந்த ஆபரேஷனில் பிறப்பு உறுப்பின் உட்புறச் சுவரையும் இறுக்கமாக்கி விடுகிறார்கள். இதன் பிறகு முதலிரவின்போது இரத்தக் கசிவும் இருக்கும்… தாங்க முடியாமல் வலியும் இருக்கும். செக்ஸ் பற்றி ஆத்திச்சூடிகூட தெரியாத பெண் நமக்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள் என கணவர் பெருமைப்பட்டுக் கொள்வார். இன்னமும் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பல பெண்கள் இப்படிப்பட்ட ஆபரேஷனுக்காகவே மேற்கத்திய நாடுகளுக்குப் போகிறார்கள்.
அமெரிக்கப் பணக்கார பெண்கள் மத்தியில் இது தான் லேட்டஸ்ட் ஃபேஷன்! இருபதாவது திருமண நாளுக்கு முன்னால் இதைச் செய்துகொண்டு குழந்தைகளோடு கிளம்பி ஹனிமூன் போகும் ஜோடிகள் அங்கே நிறைய!

இது ஒரு பக்கம் என்றால், விலைமாதர்களுக்கும் இது வசதியாகி விட்டது. எய்ட்ஸ் பயம் பீடித்திருக்கும் அமெரிக்காவில் புதிதாகத் தொழிலுக்கு வரும் விலைமாதர்களுக்கு மவுசு அதிகம். பணக்கார கஸ்டமர்கள் இலட்சக்கணக்கில் கொட்டிக் கொடுப்பார்கள். இதற்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட பெண்கள் இந்த ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். எந்தெந்த சமுதாயம் கற்புக்கும், கன்னித் தன்மைக்கும் மதிப்பு கொடுக்கிறதோ அங்கெல்லாம்தான் தவறுகள் அதிகம் நடக்கின்றன என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஒரே வித்தியாசம்… பெண்கள் நேரடியான செக்ஸ் உறவில் ஈடுபடுவதில்லை. சுய இன்பம், பிற வழி இன்பம் என மற்ற எல்லா விவகாரங்களையும் செய்கிறார்கள். திருமணத்துக்கு முன் ஆண்களுக்கு அதிக இடம் கொடுக்காமல் தவிர்த்துத் கன்னித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். டெக்னிக்கல் கன்னிப் பெண்கள் என இவர்களைச் சொல்லலாம்.