Home இரகசியகேள்வி-பதில் பெண்களின் பாலியல் கேள்வி பதில்

பெண்களின் பாலியல் கேள்வி பதில்

51

என் வயது 21. கணவருக்கு 28. திருமணத்தன்றே தலைவலி ஆரம்பித்து விட்டது.பத்து வருடங்களாக சுய இன்பப் பழக்கம் இருந்ததால் என் கணவரால் முதலிரவன்றே உறவில் ஈடுபட முடியவில்லை. இன உறுப்பில் வலி இருக்கிறது என்கிறார்.எனக்கோ செக்ஸ் ஆசை அதிகமாக இருக்கிறது. நான் அவரை விவாகரத்து செய்து விடலாமா? அல்லது அவரைக் குணப்படுத்த முடியுமா? – பெயர் வெளியிட விரும்பாதநாகர்கோயில் வாசகி.

கல்யாணச் சடங்குகளாலும், அதனால்ஏற்படுகிற களைப்பாலும் பெரும்பாலான தம்பதியருக்கு முதலிரவுமுழுமையான இரவாக அமைவதில்லை. கல்யாணத்தன்றே உடல் சங்கமம் நடந்தாக வேண்டும்என்றில்லை. உடலும், உள்ளமும் சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகு உறவில்ஈடுபடலாம். உங்கள் விஷயத்திலும் அப்படி நிகழ்ந்திருக்கலாம். கணவரின் சுயஇன்பப் பழக்கத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.மனம்தான் காரணம். தன் மனைவியை திருப்திப்படுத்த முடியுமா, ஆண்மையைநிரூபிக்க முடியுமா என்கிற பயத்தால்கூட உங்கள் கணவர் உறவைத் தவிர்க்கலாம்.அவருக்குத்தைரியம் சொல்லுங்கள். செக்ஸ் மருத்துவர் அல்லது மனநலமருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சலிங் செய்யலாம். அவராலும் ஆரோக்கியமானசெக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட முடியும் என நம்பிக்கை அளியுங்கள். உறுப்புகளில்வலி இருப்பதாகச் சொல்வதற்கும் மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெற்றுதீர்வு காணலாம்.
என்வயது 14. வயதுக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது. மார்பகங்கள்பெருத்துத் தொங்கிக் காணப்படுகின்றன. என்ன தீர்வு? – பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகி.

உடற்பயிற்சி ஒன்றுதான்ஒரே தீர்வு. மார்பகங்களில் உள்ளவை வெறும் கொழுப்புத் திசுக்கள். மார்பகக்கீழ் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்தால் ஓரளவு சரியாகும். சரியான அளவுள்ள, பட்டைவைத்த பிரா அணிவதும் அவசியம். அளவைக் குறைக்கிற சிகிச்சைகள்அறிவுறுத்தத் தக்கவையல்ல.

என் வயது 18. பூப்பெய்தி நான்கு வருடங்கள்ஆகிறது. என்மார்பகங்களில் காம்புகள் உள்ளே இழுத்த படி உள்ளன. நாளுக்கு நாள் மார்பகங்கள் சிறுத்துக் கொண்டேபோகிறது. தீர்வு சொல்வீர்களா? -சுகன்யா, கோவை.

இது இன்வர்ட்டட்நிப்பிள்ஸ் எனச்சொல்லக் கூடிய பிரச்சினையாக இருக்கலாம். அப்படியிருப்பின்நீங்கள் கல்யாணமாகி, கர்ப்பம்தரிக்கும்போது மார்பகங்கள் பெரிதாகிற சமயத்தில் இந்தப்பிரச்சினை தானாகச் சரியாகும். மற்றபடி மார்பகங்களில் ஏதேனும் வீக்கம்இருக்கின்றனவா எனப் பாருங்கள். கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா எனத்தெரியவேண்டும். நல்ல மகப்பேறு மருத்து வரை நேரில் கலந்தாலோசியுங்கள். வலிஇருந்தாலும் உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம். பிரசவத்துக்குப்பிறகு, குழந்தைதாய்ப்பால் குடிக்கிறபோது சரியாகும். கவலை வேண்டாம்.
என் வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. பிறந்தது முதல் நான் ஒருகிட்னியுடன்தான் வாழ்கிறேன். அதனால் மாதவிலக்குப் பிரச்சினைகள், கை, கால் வீக்கம், வெள்ளைப்படுதல் போன்றவைஏற்படுகின்றன. ஒரு கிட்னியுடன்உள்ள நான் கல்யாணம் பண்ணலாமா? உடலுறவிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்குமா? பிறக்கப்போகும் குழந்தையும் ஒருகிட்னியுடன் பிறக்க வாய்ப்புண்டா? – எஸ்.பிரியா, திருச்சி.

நீங்கள் திருமணம்செய்து கொள்ளக் கூடாது என்றில்லை. உங்களை ஏற்றுக் கொள்ளும் நல்ல கணவர்கிடைத்தால் தாராளமாகச் செய்து கொள்ளலாம். ஒரு கிட்னியுடன் இருந்தாலும், ஆரோக்கியமாகஇருக்கிறீர்களா என்பது தான் முக்கியம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும்மற்ற பிரச்சினைகளுக்கு சரியான சிகிச்சைகளின் மூலம் தீர்வுகாணலாம். ஒரு கிட்னியுடன் இருப்பதால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையிலோ, கர்ப்பம்தரிப்பதிலோ பாதிப்பிருக்காது. ஆனால் உங்களுக்குப் பிறக்கும்குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க ஐம்பது சதவிகிதம் வாய்ப்புகள்உண்டு.

என் வயது 28. மார்பகங்கள் சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார்.மற்ற பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கிறார். மார்பகங்களைப் பெரிதாக்க ஏதேனும் மருந்தோ, சிகிச்சையோ இருந்தால் சொல்லுங்கள். வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுங்கள். – நிர்மலா தேவி, ரத்தினபுரி.

மார்பகங்களின் அளவு என்பது பரம்பரை வாகு, உடலமைப்புபோன்ற பல விஷயங்களைப் பொறுத்தது. மார்பகங்கள் என்பவை வியர்வைசுரப்பிகள் மாதிரி ஒரு வகை சுரப்பிகள் என்பதை உங்கள் கணவரிடம் சொல்லுங்கள்.சரியான அளவுள்ள பிரா, உடற்பயிற்சி போன்ற சில விஷயங்கள் உங்கள் பிரச்சினைக்குஉதவும். மார்பகங்களைப் பெரிதாக்குவதாகச் சொல்லப்படும் மாத்திரைகள், மருந்துகள்போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவையெல்லாம்ஆபத்தானவை. கணவரிடம் பொறுமையாகப் பேசிப் புரிய வையுங்கள்
என் வயது 30. உறவு குறித்து எனக்கு நிறையசந்தேகங்கள் உள்ளன.என் கணவர் ஆபாச ஆங்கிலப் படங்களை டி.வியில் போட்டுக் காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும்வற்புறுத்துகிறார். அதெல்லாம் அறுவருப்பானதில்லையா? உடல்நலத்தைப்பாதிக்காதா? நான் கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்ப காலத்தில்எந்தெந்த மாதங்களில் உறவு கொள்ளலாம்? செக்ஸ் உணர்வுஅதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகள் உட்கொள்ள வேண்டும்? – வ. குயிலி, தூத்துக்குடி.

உறவு அலுத்துப் போகாமலும், நெருக்கம் அதிகரிக்கவும்உங்கள் கணவரை மாதிரி செக்ஸில் புதுமைகளைக் கையாள்பவர்கள் உண்டு.அதில் உங்கள் இருவருக்கும் விருப்பம் இருக்கிற பட்சத்தில் தவறேதுமில்லை.உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அதற்கு உடன்படுவதும், மறுப்பதும்உங்கள் தனிப்பட்ட விருப்பம். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும்ஏழாவது மாதம் முதல் பிரசவம் வரை உறவைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. இடைப்பட்டமாதங்களிலும் பக்க வாட்டு, பின் பக்க நிலைகளில் வயிற்றுக்கு அதிக அழுத்தம்கொடுக்காத போஸ்களில் உறவு கொள்வதே பாதுகாப்பு. உடலுறவு என்பது மனம்சம்பந்தப்பட்ட விஷயம். எப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவும் ஆரோக்கியமான செக்ஸுக்குஉதவும். அதிகக் கலோரிகள் உள்ளவற்றைத் தவிர்க்கவும். மனம் ஆரோக்கியமாகஇருந்தால், உறவும் நன்றாக இருக்கும்.