Home சமையல் குறிப்புகள் பீட்ரூட் மட்டன் மசாலா

பீட்ரூட் மட்டன் மசாலா

45

தேவையானவை
download (12)
ஆட்டிறைச்சி – 500 கிராம்
பீட்ரூட் – 1 பெரியது அல்லது 2 நடு அளவு
வெங்காயம் – 1 1/2 நடுத்தர அளவு
தக்காளி – 3
இஞ்சி, பூண்டு – 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 (விருப்பமானால்)
பட்டை – 1 நீண்ட துண்டு
கொத்தமல்லி இலைகள் – சில
எண்ணெய்– 3 மேசைக்கரண்டி & 1-2 தேக்கரண்டி கடைசியில் சேர்க்க
உப்பு – சுவைக்குஸ
தண்ணீர் – தேவையான அளவு
மஞ்சத்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள்– மிதமான காரத்திற்கு 1 தேக்கரண்டி / அதிக காரத்திற்கு 2 தேக்கரண்டி

செய்முறை

2செ.மீ க்யூப்களாக பீட்ரூட்டை வெட்டவும். வெங்காயம், தக்காளி, மிளகா ய், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை நறுக்கவும். ஒருபிரஷர் குக்க ர் பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும். 2-3 நிமிடங்கள் பீட்ரூட் சேர் த்து, வதக்கவும். பாத்திரத்தில் இருந்து நீக்கி, ஒரு பக்கமாக வைக்கவும். பாத்திரத்தில் பட்டை மற்றும் வெங்காயம்சேர்க்கவும். சுமார் 4-5நிமிடங்க ள் அவற்றை வறுக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.

நறுக்கியத்தக்காளி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்; 2-3 நிமிடங்கள் கிளறவும். ஆட்டி றைச்சி துண்டுகளைசேர்த்து, கிளறி 2-3 நிமிடங்கள் சமைக்கவும். மூடியி ட்டு, மிதமான வெப்பத்தில் பிரஷர் குக்கரில் சமைக்கவும். முதல் விசிலி ற்குப் பிறகு, வெப்பத்தை குறைத்து, 12-14 நிமிடங்கள் குறைந்த வெப்பத் தில் சமைக்கவும். பிரஷர் போனதும் மூடியைத் திறக்கவும்.

பீட்ரூட் சேர்த்து, கிளறவும். மூடியிட்டு, மிதமான வெப்பத்தில் பிரஷர் குக் கரில் மீண்டும் சமைக்கவும். 2 விசிலிற்குப் பின்னர் அடுப்பினை அணை க்கவும். பிரஷர் போனதும் மூடியைத் திறக்கவும். மிதமான வெப்பத்தில் இன்னும் சில நிமிடங்கள், சாறு அடர்த்தியாகும் வரைக் குழம்பினை கொதிக்கவிடவும். குழம்பு பாத்திரத்தின் கீழே ஒட்டிக்கொள்ள ஆரம்பித் தால், சுமார் 1-2 தேக்கரண்டி எண்ணெயைச் சேர்க்கவும். கொத்த மல்லி இலைகள் கொண்டு அலங்கரிக்கவும்.