Home அந்தரங்கம் பால்வினை நோய்க்கு இளம் வயதினர்: அதிர்ச்சி ரிப்போர்ட்

பால்வினை நோய்க்கு இளம் வயதினர்: அதிர்ச்சி ரிப்போர்ட்

23

பள்ளி செல்லும் மாணவர்கள் கூட செக்ஸ் பற்றி பேசும் காலம் வந்து விட்டது. பள்ளி மாணவிகள் கழிவறையில் குழந்தை பெற்று மறைத்து வைத்து அதிரவைக்கிறார்கள். அமெரிக்காவில் அல்ல இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில்தான். இவ்வாறு இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதினால் எஸ்.டி.டி ( STD) sexually transmitted diseases எனப்படும் பால்வினை நோய்க்கு பதின் பருவத்தினர் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 40 சதவிகித பதின் பருவத்தினர் கர்ப்பமடைகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இணையம், தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் இந்தியாவிலும் இந்தநிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இள வயதினர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான இளவயதினர் கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்க முறையற்ற வழிகளை கையாளுகின்றனர் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கிறது.

பதின் பருவத்தில் ஏற்படும் செக்ஸ் ஆர்வம் அவர்களை எஸ்.டி.டி எனப்படும் பால்வினை நோயிலும் தள்ளிவிடுகிறது. இந்த எஸ்.டி.டி பற்றி இன்னமும் பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. ஹெச்ஐவி, எய்ட்ஸ் போல இதுவும் அச்சம் தரக்கூடிய நோய் என்பதை உணரவேண்டும்.

இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும், அமெரிக்காவில் ஆங்காங்கே எஸ்.டி.டி கிளீனிக்குகள் உள்ளன. தற்போது பெரும்பாலான டீஜ் ஏஜ் வயதினர் அறியாமையினால் எஸ்.டி.டி நோய்க்கு ஆளாகி வருவதாகவும் எச்சரித்துள்ளனர்.

பதின் பருவத்தில் செக்ஸ் ஈடுபாடு குறித்து அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் டீஜ் ஏஜ் செக்ஸ் மூளை நரம்புகளை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர். எலிகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது.

இந்தியாவில் இளம் வயதினரிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. பள்ளி பருவத்திலேயே பாலியல் குறித்த விழிப்புணர்வும், அது குறித்த அவசியமும் கல்வி வாயிலாக அறிவுறுத்தப்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.