Home சூடான செய்திகள் பாலியல் தகவல்கள் பலான புள்ளி விபரம்

பாலியல் தகவல்கள் பலான புள்ளி விபரம்

28

இந்தியர்களில் 10க்கு 7 பேர், அதாவது 70% AIDS, HIV பற்றி கவலைப்படுகின்றனரே தவிர, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில்லை… 27% இந்தியர்கள் AIDS, HIV பாதிப்பைத்தடுக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளுவதில்லை. வெறும் 15% மட்டுமே ஆணுறையைப் பயன்படுத்துகின்றனர்.

ஓராண்டில் 76 முறை உடலுறவு கொள்கின்றனர் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹாங்காங் நாட்டவர் 63 முறையும், சீனர்கள் 72 முறையும், அமெரிக்கர்கள் 124 முறையும், பிரிட்டனைச்சேர்ந்தவர்கள் 107 முறையும் உடலுறவு கொள்கின்றனர்.

இந்தியர்களில் 77% பேர் ஒரே ஒருவரிடம் மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் இப்படிப்பட்டவர்கள் வெறும் 11% மட்டும்தான். பிரிட்டனில் 3% பேர்.

கற்பைக் காப்பாற்றிக் கொள்வதில் மற்றெந்த நாட்டினரையும் விடவும் இந்தியப்பெண்கள் முதலிடத்தில் உள்ளனர் என்பது மட்டும் மகிழ்ச்சியான செய்தி. இந்தியல்கள் முதன்முறையாக தங்களது 20.3 வயதில்தான் உடலுறவே கொள்கின்றனர். பிரிட்டனில் 16.9 வயதிலும், அமெரிக்க இளசுகள் 16 வயதிலும் முதல் அனுபவத்தைப் பெற்றுவிடுகின்றனர்.

இந்திய பள்ளி மாணவர்கள் செக்ஸ் பற்றி 16 வயதில்தான் தெரிந்து கொள்கின்றனர். ஏறக்குறைய 28% இந்தியர்களுக்கு டாக்டர்கள், நர்சுகள், குடும்பக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலமாகத்தான் செக்ஸ் சுகாதாரம் பற்றி தெரியவருகிறது. 27% பேருக்கு நண்பர்கள் சொல்வதுதான்.

பிரிட்டனில் 23% பேர் தங்கள் பெற்றோர் மூலம் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் இது இந்தியாவில் வெறும் 6% தான்.

இந்தியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மிகவும் பிடித்த காரியம் செக்ஸ் இல்லை. வேலைக்குப் போவதுதான் மிகவும் பிடிக்கும் என 30% பேரும், நண்பர்களுடன் சுற்றுவதை 21% பேரும், டி.வி. பார்ப்பதை 14 % பேரும் பிடித்துள்ளதாகக் கூறுகின்றனர். வெறும் 3% பேர் மட்டுமே செக்ஸ் மிகவும் பிடித்த செயல் என்று கூறுகின்றனர். பிரிட்டனில் இது 31%.

இந்தியர்களில் 32% பேர் பீச் மணலில் உடலுறவு கொள்ள விரும்புகின்றனர். 7% சமயலறையில் உடலுறவு கொள்ள விரும்புகின்றனர்.

பெர்சனால்டி பார்த்து மயங்குவதும் இந்தியாவில்தான் அதிகம். இது 26%. பேச்சு, பழக்க வழக்கம் பார்த்து 15% பேரும், வேலையைப்பார்த்து 11% பேரும் கவரப்படுகின்றனர்.

உலகின் மொத்த மக்கட்தொகையில் 46% HIV, AIDS பற்றி கவலை கொண்டதாகத் தெரியவில்லை. உலக அளவில் பாலியல் பற்றிய கல்வியறிவை சராசரியாக 13 முதல் 19 வயதில்தான் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் முந்தைய தலைமுறையினரை விட தற்போதைய இளைஞர்கள் சிறிய வயதிலேயே பாலியல் பற்றி தெரிந்து கொள்கின்றனர்.

உலக மக்கட்தொகையில் 46% இந்த நோய் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது. 10-ல் நான்கு பேர், அதாவது 40% பேர் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்வது இல்லை. தென் ஆப்பிரிக்காவில் 81%, தாய்லாந்தில் 77% என மற்ற நாட்டினரைவிட தற்காப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 28% பேர் ஆணுறையை பயன்படுத்துவதில்லை.

பெரும்பாலும், ஆண்களில் 10-ல் மூன்று பேர், அதாவது 30% பேர், பெண்களில் 30% பேரும் நண்பர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.

பெரும்பாலான நாடுகளில் உள்ளவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள மிகவும் விரும்பினாலும், இந்தியர்களும், மெக்ஸிகோ இனத்தவரும் வேலை செய்வதையே விரும்புகின்றனர். தாய்லாந்து நாட்டவர் தூங்குவதையும், சீனர்கள் டி.வி. பார்ப்பதையும் அதிகம் விரும்புகின்றனர்.

உலக நாடுகளில் ஏறக்குறைய 37% பேர் அடுத்தவரின் பெர்சனால்டியைப் பார்த்தும், 19% அழகைப்பார்த்தும், 11% பேர் நகைச்சுவை உணர்வைப்பார்த்தும் ஆசை கொள்கின்றனர்