Home பாலியல் பாலியல் உணர்வை அதிகரிக்கவைக்கும் காலுறை: ஆய்வு கூறும் உண்மை என்ன?

பாலியல் உணர்வை அதிகரிக்கவைக்கும் காலுறை: ஆய்வு கூறும் உண்மை என்ன?

87

இரவில் காலுறை அணிந்து தூங்கினால் பல ஆரோக்கியமான நன்மைகளைப் பெறமுடியும் என்று விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. படுக்கைகளில் நாம் அணிந்திருக்கும் காலுறை உடல் சார்ந்த பல ஆரோக்கிய நிலைமைகளுக்கு ஊக்கத்தை அளிப்பதாக அந்த ஆய்வுகள்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக படுக்கைக்கு செல்லும்போது காலுறைகளினை அணிந்துவிட்டு சாக்ஸ் சென்றால் எளிமையான உறக்கத்தினையும் உடல் இன்பத்தினையும் அடைய முடியும் என்பதே இந்த ஆய்வுகள் கூறும் செய்தியாகும். குறிப்பாக பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு இந்த முறைமை மிகவும் பயனுடையதாக இருக்கின்றது என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்ட பிற நன்மைகளாக ரெயினோட்ஸ் நோய்க்கான (Raynaud’s disease) அறிகுறிகளைக் குறைத்துக்கொள்வதுடன் பெண்களுக்கான மாதவிடாய் சுருக்கத்தை எளிதாக்குகின்றன.

Groningen பல்கலைக்கழகத்தில் 2005 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், படுக்கையில் காலுறை அணிந்து தூங்கும் தம்பதிகளுக்கு, தாம்பத்திய வாழ்க்கை சிறந்ததாக காணப்படும் என கண்டறியப்பட்டது.

பாலியல் உணர்வை அதிகரிக்கவைக்கும் காலுறை: ஆய்வு கூறும் உண்மை என்ன?

கோபன்ஹேகனில் (Copenhagen) மனித இனப்பெருக்கம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐரோப்பிய சங்கத்தில் இந்த ஆய்வின் முடிவுகள் வழங்கப்பட்டன.குறித்த ஆய்வில் 13 தம்பதிகள் ஈடுபடுத்தப்பட்டதுடன் அவர்களில் காலுறை அணிந்து தூங்கியவர்களே அதிகப்படியான பாலுணர்வு நிலையினை அடைந்ததாக கண்டறியபட்டது.

குறிப்பாக குளிர் பிரதேசங்களில் வழ்பவர்களில் கால் பாதங்களை குளிர் பிடிப்பதனால் அது நரம்பு மண்டலத்தின் வேகத்தினை குறைத்துக்கொள்வதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. காலுறையை அணிவதனால் உண்டாலும் வெப்பமான நிலைமையே நரம்பு மண்டலத்தை சீராக்குவதாக சொல்லப்பட்டது.

பாலியல் நடவடிக்கைகளின்போது மூளையின் செயற்பாட்டை மேம்படுத்துவதற்கு நரம்புகளின் சீரான இயக்கம் இன்றியமையாதது என இந்த ஆய்வின் இறுதி முடிவாகக் கூறப்பட்டது.

இதேவேளை படுக்கையில் வேகமாக உறங்குவதற்கும் இந்த காலுறை அணியும் வழக்கம் துணைபுரிவதாக இன்னொரு ஆய்வில் கூறப்பட்டது. நெதர்லாந்து நாட்டின் நரம்பியல் நிறுவனம் கடந்த 2007இல் மேற்கொண்ட ஆய்விலேயே இது கண்டறியப்பட்டது.

உடலைச் சுற்றியுள்ள நரம்புகளைச் சூடாக்குவதன்மூலம் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு வேகமான உறங்கு நிலையினைப் பெறமுடியும் என அந்த ஆய்வு கூறியது. குறிப்பாக தூங்கப் போவதற்கு முன்னர் காலுறை அணியும் செயற்பாடானது, உடலிலுள்ள வெப்ப நிலை வடிவங்களைத் தூண்டுவதாக சொல்லப்பட்டது.