Home பெண்கள் அழகு குறிப்பு பார்ப்பதற்கு மென்மையாக தெரிய வேண்டுமா? உங்கள் முடியில் இருந்து ஆரம்பியுங்கள்

பார்ப்பதற்கு மென்மையாக தெரிய வேண்டுமா? உங்கள் முடியில் இருந்து ஆரம்பியுங்கள்

23

ஒரு சிவப்பு ரத்தின கம்பளத்தில் நீங்களும் உங்கள் கூந்தலும் அழகாக தெரிய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகும். எனவே உங்கள் கூந்தலை மென்மையாக பின்பக்கமாக பல விதங்களில் வாருவது எப்படி என்று இங்கே பார்ப்போம். இதோ உங்கள் கூந்தல் மென்மையாக தெரிவதற்கான வழிமுறைகள்.
– இதை செய்ய வேண்டும் என்றால் உங்கள் முடியை புதிதாக நன்றாக கழுவுவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.. ஆனால் நீங்கள் எப்பொழுதும் உங்கள் முடிக்கு தரமான நல்ல பொருட்களை பயன்படுத்த வேண்டும், இதனால் உங்கள் கூந்தல் ஒரே மதிரியாகவும், நல்ல முறையிலும் காணப்படும்.

உங்கள் முடியில் இருந்து ஆரம்பியுங்கள்.
– நீங்கள் சில விழாக்களுக்கு செல்லும் போது, தலைக்கு குளித்த பின் ஈரமாக இருக்கும் போது சீப்பினால் பின்பக்கமாக வாரிய பின், கூந்தலை ஒவ்வொரு பகுதியாக பிரித்து ஹேர்ஸ்ப்ரே கொண்டு ஸ்பிரே செய்ய வேண்டும். இப்படி நீங்கள் செய்வதால், உங்கள் முடியை நல்ல அடர்த்தியாக காட்ட முடியும்.
– அடிக்கடி முடியை கடுமையாக வாரக் கூடாது. ஒரு சில தடவை, சற்று பெரிய பல் கொண்ட சீப்பினால் முடியை மென்மையாக வாரினாலே போதும். மேலும் கடையில் கிடைக்கும், கூந்தல் அழகு க்ரீம், மற்றும் மவுஸ்ஸி கொண்டும் உங்கள் கூந்தலை அழகுபடுத்தலாம். முடிந்தவரை இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை உபயோகிப்பது நன்று..
– உங்கள் முன் நெற்றியில் முடியை அதிகப்படுத்தினால் உங்கள் தோற்றம் நன்றாகவோ, நன்றாக இல்லாமலோ இருக்கும். எனவே சிறந்த‌ முறையில் உங்கள் கூந்தல் அடர்த்தியையும், நீளத்தையும் அதிகபடுத்தியும் காட்டலாம். அழகாக தோன்ற உங்கள் முடியை பகுதி பகுதியாக பிரித்தும் காட்டலாம்.
– நீண்ட முடி உள்ளவர்களுக்கு சிறந்த முறையில் தோற்றமளிக்க ஒரு குதிரைவால் போட்டால் நன்றாக இருக்கும். முடிகள் அலைபாயாது இருக்க தேவைப்படும் இடங்களில் சிறிய பின்களையும் நீங்கள் உபயோகப்படுத்தலாம்.
என்னென்ன அணியலாம்:
– நீங்கள் அழகாக தெரிய எந்தெந்த மாதிரியான அணிகலன்கள் அணிய வேண்டும் என சில முறைகள் உள்ளன நீங்கள் காதுகள் மற்றும் கழுத்தில் (இரண்டில் எதாவது ஒன்றில் மட்டும்) அணிகலன் அணிந்தால் நன்றாக இருக்கும். கிம் கர்தாஷியன் போல‌ மார்பகப் பகுதியில் ஒரு பெரிய ப்ரூச் அணிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
– நீங்கள் தலைக்கு ஒரு தலைப்பாகை அல்லது ஹேர் பேண்ட் அணிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: வட்ட முகங்கள் கொண்டவர்களுக்கு, அவர்களின் முக அமைப்பினை எடுப்பாக காட்ட முடி அலங்கரிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே ஒரு மிடுக்கான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு ஏற்ற பின்னலை நீங்கள் பின்ன வேண்டும். மென்மையான மற்றும், மிருதுவான முடி உள்ளவர்களுக்கு பின்னல் அலங்காரம் போடுவது எளிது.மேலும் இவர்களுக்கு கூந்தலை அப்படியே தளர்வாக விடுவதும் நன்றாக இருக்கும்.