Home பெண்கள் அழகு குறிப்பு பளிச் சருமத்திற்கு ஆரோக்கியமான பேஷியல் கிளன்சர்

பளிச் சருமத்திற்கு ஆரோக்கியமான பேஷியல் கிளன்சர்

30

அழகான, ஆரோக்கியமான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். கோடை காலத்தில் சருமம், கருமையடையாமல் பாதுகாக்க வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களே நமக்கு கை கொடுக்கின்றன. அழகியல் நிபுணர்கள் கூறும் இந்த ஐடியாக்களை பின்பற்றுங்களேன்.

காரட், பால் 

காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் முகத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. காரட்டை நன்றாக வேகவைத்து அத்துடன் பால் அல்லது யோகர்ட் சேர்த்து முகத்திற்கு நன்றாக மசாஜ் செய்யவும். 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் மென்மையாகும். இது வைட்டமின் சத்து நிறைந்த பேஷியல் கிளின்சராக செயல்படுகிறது.

கோதுமை மாவு தயிர்

கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல் போய்விடும்.பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால் நிறம் கூடும். கோதுமை மாவில் தயிர் சேர்த்து க்ளென்ஸராக பயன்படுத்தலாம்.

யோகர்ட் கிளன்சர்

யோகர்டில் உள்ள லாக்டிக் அமிலம் மிகச்சிறந்த கிளன்சராக செயல்படுகிறது. இது இறந்த செல்களை நீக்கும். முகத்திற்கு இளமையை மீட்டுத்தரும். சுத்தாமான யோகர்டை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவேண்டும். பின்னர் கனிந்த வாழைப்பழத்தை நன்கு மசித்து அத்துன் சிறிதளவு கடலை மாவு சிறிதளவு யோகர்ட் சேர்த்து முகத்தில் பேஷ் பேக் போடலாம். சருமம் மென்மையாகும்.

சுத்தமான பால்

காய்ச்சாத பாலில் உள்ள ரசாயனங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகின்றன. இதில் உள்ள லாக்டிக் அமிலம் சரும அழகிற்கு துணை புரிகிறது. இரண்டு ஸ்பூன் பாலில் சிறிதளவு ஓட்ஸ் சேர்த்து நன்றாக ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்துவர முகம் பளபளப்பாகும்.

பப்பாளிப் பழத்துடன் சிறிதளவு யோகர்டு அல்லது பால் சேர்த்து நன்றாக மசித்து அதனை முகத்தில் அப்ளை செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ சருமம் மென்மையாகும்.

முகம் பளபளப்பிற்கு

தேனில் பால்,தயிர்,அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,மிருதுவாகவும் ஆகும். பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம்,அரிப்பு,வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது.

சந்தனம், முல்தானிமட்டி கலந்த, பேஸ் பாக் உபயோகித்து வர, முகம் பொலிவாகவும்,மிருதுவாகவும் மாறும். கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

முகத்தில் கருமை மறைய

முள்ளங்கி சாற்றுடன் சிறிதளவு மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும். பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

சருமச் சுருக்கம் 

பரு,கரும்புள்ளி அல்லது வெடிப்பு உள்ள முகத்திற்கு காய்ச்சிய 1 கப் பால் குளிர்ந்த பிறகு 1/2 எலுமிச்சையை பிழிந்து,கலந்து கழுவினால் நல்லது. 1 தேக்கரண்டி கடலெண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் பரு,கரும்புள்ளிகள் வரவே வராது.

ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

கருவளையம் போக்க

கண்களுக்கு கீழே கருவட்டத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வரவும். பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

இவை பொதுவாக கூறப்பட்டுள்ளது. உங்களின் சருமம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து பின்பற்றுங்கள். அழகான சருமம் கிடைக்கும்.