Home ஆரோக்கியம் பல் சொத்தை வராமல் தடுக்கலாம்!

பல் சொத்தை வராமல் தடுக்கலாம்!

31

teethபல் சொத்தை வராமல் தடுப்பது எளிது. குழந்தைப் பருவத்தில் இருந்தே காலை, மாலை இருவேளையும் பல் தேய்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடுவதால், பல் சொத்தை வருகிறது என்பது உண்மைதான். பற்களில் படியும் இனிப்பு, கிருமிகள் உருவாக வழி செய்கிறது.

இதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழி, உணவு சாப்பிடுவதற்கு முன் இனிப்பு சாப்பிடலாம். இனிப்பு சாப்பிட்ட பின் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை நன்றாக மென்று சாப்பிட்டால், பற்களில் படிந்துள்ள இனிப்பு, பற்களின் இடையில் தங்கியுள்ள உணவு துகள்களை நார்ச்சத்து சுத்தம் செய்துவிடும்.

பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளை சாப்பிடும் பழக்கம் நம்மிடையே அதிகமாக உள்ளது. உணவின் இயற்கைத் தன்மை மாறும்போது, அதில் நார்ச் சத்துக்கள் இருக்காது.

நார்ச்சத்து இல்லாத உணவு பற்களில் ஒட்டிக் கொள்ளும். இது நீண்ட நேரம் அப்படியே இருக்கும்போது, பற்களில் படியும் இனிப்பைப் போலவே, பாக்டீரியாக்கள் உருவாக வழி செய்கிறது.

குழந்தைகளுக்கு சொக்லேட் சாப்பிடக் கொடுத்தால், உடனடியாக ஒரு கேரட் அல்லது ஏதாவது ஒரு பழத்தை கடித்துச் சாப்பிடக் கொடுங்கள்.

வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக, பல் பரிசோதனை செய்ய வேண்டும். காலை, மாலை இருவேளையும், 10 நிமிடங்கள் பல் துலக்குவது அவசியம். இதுபோன்ற எளிமையான வழிகளை பின்பற்றினாலே, பல் சொத்தை வராது.

பற்சொத்தை வந்தவுடன் பல்லைப் எடுத்து விட வேண்டும் என்பதில்லை. பாதிப்பின் அளவைப் பொறுத்து சிகிச்சை இருக்கும்.