Home அந்தரங்கம் பருவ வயது பையனை தனி அறையில் தாளிட்டு படுக்க வைக்கலாமா? என்ன எழவு க லாச்சாரமே!...

பருவ வயது பையனை தனி அறையில் தாளிட்டு படுக்க வைக்கலாமா? என்ன எழவு க லாச்சாரமே! ஆயிரம் இருந்தாலும் நம்ம ஊர் போல வராது!

700

நண்பர் ஒருவருக்கு அமெரிக்காவில் வேலை நிரந்தரம் ஆகிவிட்டதால், குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆக தயாராகி கொண்டிருக்கிறார்கள். அங்கே சென்றதும் கொஞ்ச நாட்கள் ஒரு அடுக்ககத்தில்(apartment) குடியிருந்தார்கள். பின்னர் அது வேலை செய்யும் இடத்திற்கு நெடுந்தொலைவில் இருக்கவே, நண்பர் இன்னொரு அடுக்ககத்தில் வீடு பார்க்க கிளம்பியுள்ளார். அங்கு சென்றதும் அந்த அடுக்ககத்தில் உள்ள மேலாளர், எத்தனை பெட் ரூம் வேண்டுமென கேட்டுள்ளார்.

அதற்கு நண்பரோ, நாங்க மூவர் தான். ஒன்று போதும் என கூறியுள்ளார். அதற்கு அவர்கள், மன்னிக்கவும் மூன்று பேருக்கு ஒரு அறை கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இவரும் முடிந்த அளவிற்கு நானும் மகனும் ஹாலில் படுத்துக்கொள்வோம், மகன் நாலு வயது பையன் தான் அவனை எப்படி தனியாக படுக்க வைப்பது? என கேள்விகேட்கவே, அவர் நமட்டு சிரிப்புடன் குழந்தை சுயசார்புடன் தான் வளர வேண்டும். அதனால் தான் இங்கு இப்படி ஒரு ரூ ல்ஸ் என கூறியுள்ளார்.

நண்பர் மற்றொரு வீட்டிற்கு வாடகைக்கு சென்றுள்ளார். அங்கு ரெண்ட் கொஞ்சம் அதிகம் தான். இருப்பினும் நண்பர் தன் மகனை தன்கூடவே வைத்துக்கொள்ளலாம். எந்த பிர ச்சனையும் இல்லை. பின்னர் தான் புரிந்தது. காசு இருந்தால் ரூ ல்ஸ் எல்லாம் அவர்களது இஷ்டத்திற்கு தான் என்பது.

குழந்தை சுயசார்போடு வளரும் என்பதெல்லாம் சும்மா ஜல்லி அடிக்கும் வேலை தான். நமது க லாச்சாரம் தான் சரியானது. குறிப்பிட்ட வயது வரை அம்மா கண்பார்வையில் வளரும் குழந்தை தான் உருப்படியாக வளரும். தனியறையில் தாளிட்டு கொள்ளும் குழந்தை, அந்த அறையில் என்ன செய்வது என்பது கூட தெரியாமல் எல்லா கெ ட்டபழக்கத்திற்கும் அ டிமையாகி இருக்கும். அதுமட்டுமின்றி இதுபோன்ற மேற்கத்திய நாடுகளில் பையனுக்கு பதினெட்டு வயது நிரம்பியதும் அவன் தனியாக வீடு எடுத்து தங்க வேண்டும். அவன் படிப்பிற்கு, வேலைக்கு, அவனது அன்றாட செலவிற்கு எல்லாம் அவன் தான் தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும். பெற்றவர்களை நம்பி இருந்தால் நண்பர்கள் மத்தியில் அந்த பையனுக்கு மா னப்பிரச்னை. நம்மூரில் உறங்கும்போது குழந்தைக்கு அம்மாவின் அரவணைப்பு வேண்டுமென தூங்கும்போது கூட அம்மாவின் சேலையில் தூளிக்கட்டி போடுவார்கள்.

சுயசார்பு வேண்டுமென்றால் அந்த பையனுக்கோ பெண்ணிற்கோ சமைக்க கற்றுக்கொடுங்கள், இல்லையெனில் தனியாக கடைகளுக்கு, மின்சார கட்டணம் கட்ட, டிக்கெட் புக் செய்ய இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை சொல்லிக்கொடுங்கள். அதைவிடுத்து தனியாக தனியறையில் தாளிட்டு கொண்டு சுதந்திரம், சுயச்சார்பு என சொல்லிக்கொண்டு, அவனை கெ டுத்துவிடாதீர்கள். அவன் ரூமில் என்ன செய்தாலும் தெரியாமல் பார்த்துக்கொள்வதா சுதந்திரம்? நமது அப்பா அம்மாக்கள் அடிக்கடி பிள்ளைகளை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் பையனை வேவு பார்க்க இல்லை.

பட்டு திருந்துவது புத்திசாலித்தனம் இல்லை, படுவதற்கு முன்னரே பையனை அ லார்ட்டாக வைத்திருப்பது தான் பெற்றோர்களது வேலை. எப்படியானாலும் பெண்ணாக இருக்கட்டும் ஆணாக இருக்கட்டும் ஒரு கட்டத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறுவது இயல்பே! அது தெரியாமல் மேற்கத்திய க லாச்சாரம் நல்லதா கெ ட்டதா என கூட தெரியாமல் அப்படியே அதனை பின்பற்றுபவர்கள் மத்தியில், மேலை நாட்டில் வேலை கிடைத்தாலும் பையனை தனிஅறையில் தூங்க வைக்க மாட்டேன் என பி டிவாதமாக வேறு வீடு பார்த்த எனது நண்பரை நினைத்தால் பெருமையாக உள்ளது.