Home பெண்கள் அழகு குறிப்பு பருவ மங்கைகளுக்கான சருமப் பாதுகாப்புக் குறிப்புகள்

பருவ மங்கைகளுக்கான சருமப் பாதுகாப்புக் குறிப்புகள்

21

இப்போதுள்ள மாசு நிறைந்த சுற்றுசூழலில் இருந்து தங்கள் சருமத்தை பொலிவுடன் பாதுகாக்க பருவ மங்கையர் தினம் தினம் அவதிப்படுகின்றனர். கரும்புள்ளிகள், சுருக்கம், பரு, பொலிவின்மை என பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றனர். இருபது வயதிலேயே முகத்தில் வாட்டம் ஏற்பட்டுப் பொலிவு குறைந்துவிட்டால் பின் முப்பதுகளில் உங்களது சருமம் என்ன நிலையில் இருக்கும்? நினைக்கவே நெஞ்சு பதப்பதைக்கிறதா? பதற்றத்தைக் கைவிடுங்கள். சருமம் பொலிவிழப்பதற்கு முக்கியக் காரணமாக திகழ்வது மனக்கவலை. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு இருபது வயதிலேயே மனக் கவலை ஏற்பட்டு விடுகிறது. அதற்கு காதலோ, ஆன்டுராய்ட் மொபைல்களோ கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம். அதனால் அழகியலில் கவனமாக இருக்க வேண்டும் எனில் கவலையை தொலைக்க கற்றுக்கொள்ளுங்கள். இதுவே உங்களது அழகை பெருமளவில் பாதுகாக்கும். சரி, இனி நீங்கள் உங்களது சருமத்தைப் பாதுகாக்க இருபதுகளில் முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவை என்னென்னவென அறியலாம்ஸ புகைப்பது மட்டும் அல்ல, புகை சார்ந்த இடங்களில் இருப்பதையும் முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள். புகைப்பது யாரெனினும் சருமக் கெடுதல் வரப்போவது என்னவோ உங்களுக்குத் தான் இருக்கும்.

ஆகவே வெளியில் செல்லும் போது முகத்திற்கு ஸ்கார்ப் கட்டிக்கொள்வது நல்லது ஆகும் சரும பாதுகாப்பு பொருட்களைத் தேர்வு செய்யும் போது மிக கவனமாக இருப்பது அவசியம். அந்த பொருளில் இருக்கும் மூலப் பொருட்கள் உங்களது சருமத்திற்கு பொருத்தமானதா? இல்லையா? என தெரிந்து வாங்குவது மிக மிக முக்கியமான ஒன்று. நாம் பெரும்பாலும் முகத்தைப் பராமரிக்கும் அளவு கண்கள் மற்றும் கண்களைச் சுற்றி இருக்கும் முக்கியமான சரும பகுதியைப் பராமரிக்க மறந்துவிடுகிறோம். எனவே, பருவ வயது முதலே சரியாக கண்களைச் சுற்றியுள்ள சரும பகுதியைப் பராமரிக்க வேண்டுவது அவசியமான ஒன்றாகும். நீங்கள் வெயிலில் வெளியில் போகும் போது மறக்காமல் சன் ஸ்க்ரீன் லோசன் உபயோகப்படுத்த வேண்டும். உங்கள் சருமத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக படும் போது, சருமம் தனது தன்மையை இழக்க நேரிடும் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் நல்ல சருமம் பெற வேண்டுமெனில், தொடர்ந்து சருமப் பராமரிப்பு வேலைகளை செய்ய வேண்டும். அவ்வப்போது என்று இல்லாமல், சரியான நேர இடைவேளைக்கு ஒருமுறை நீங்கள் உங்களது சருமத்தை பராமரித்தல் நன்மை தரும். உணவுப் பழக்கவழக்கத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள். இது சருமத்தில் தங்கும் இறந்த செல்களை அழித்து, புத்துணர்ச்சி தரும் தன்மை வாய்ந்தது ஆகும். இது உங்களது உடலுக்கும், சருமத்திற்கும் நிறைய நற்பயன்களை விளைவிக்கும். பெரும்பாலனவர்கள் அழகுப் பராமரிப்பில் முகத்திற்கு காட்டும் அளவு அக்கறையை கழுத்திற்கு காட்டுவதில்லை. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க நீங்கள் கழுத்திற்கும் கிரீம் உபயோகப்படுத்திப் பாதுகாப்பது முக்கியம். சுடு தண்ணீரில் குளிப்பது நமது மேல் சருமத்தில் தங்கி இருக்கும் கிருமிகளை அளிக்கவும், நமது சருமம் இலகுவாக உணர்வதற்கும் பயனளிக்கிறது உங்களுக்கு தெரியுமா ஸ்ட்ரா உபயோகப்படுத்துவதினால் இதழ்களில் சுருக்கம் ஏற்படுகிறது. நீங்கள் சுருக்கமற்ற சருமம் பெற வேண்டுமெனில், நல்ல பழக்கங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி செய்வது பல வகைகளில் உங்களுக்கு நன்மை விளைவிக்கும். அதில் சிறந்தப் பயன் என்னவெனில் இது நமது சரும நலத்தைப் பாதுகாக்க நல்ல முறையில் உதவுகிறது. மற்றும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. உங்களது சருமத்தைப் பாதுகாக்க உடற்பயிற்சி மேற்கொள்வதை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்