Home பெண்கள் அழகு குறிப்பு பருவை விரட்டும் மஞ்சள்

பருவை விரட்டும் மஞ்சள்

35

இளமை துள்ளாட்டம் போடும் டீன் ஏஜை எட்டிப்பிடித்ததும், பலரும் சந்திக்கும் பிரச்சினை முகப் பருக்கள்! அழகுக்கு சோதனையாக வரும் இந்தப் பருக்களால் உண்டாகும் வலி இன்னொரு தொல்லை. இதற்கான எளிய வைத்தியம் மஞ்சளிடம் இருக்கிறது.

• பசும் மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துப்பூசி, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், பரு சீழ் பிடிக்காது. வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்து விடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.

• முகத்தில் தோல் சொரசொரப்பாக, கடினமாக இருந்தால் பசும் மஞ்சளோடு துளசியை சேர்த்து அரைத்துப் பூசுங்கள். விரைவிலேயே பட்டு போன்ற மென்மை முகத்தில் குடியேறும்.

• பசும் மஞ்சளற் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் பளிச்சிடும் நிறம் கிடைக்கும். இதனுடன் 2 வேப்பிலையையும் சேர்த்துக் கொண்டால், அழகிய நிறம் கிடைப்பதோடு கரும்புள்ளிகளும் மறைந்து விடும். அடர்ந்த கருமை நிறந்தவர்கள் இந்த முறையை பின்பற்றினால் ஒரே வாரத்தில் நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

• கால் கிலோ கிழங்கு மஞ்சள், கால் கிலோ பூலாங்கிழங்கு, கால் கிலோ கஸ்தூரி மஞ்சள் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்து 100 மி.லி தேங்காய் எண்ணெயை உடலில் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு பயற்றம் மாவு அல்லது சோப்பு தேய்த்துக் குளித்தால் நாளுக்கு நாள் சருமம் மெருகேறி, அழகிய நிறம் பெறுவதை கண்கூடாகக் காணலாம். உலர்ந்த சருமத்தினர், நடுத்தர மற்றும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அற்புதமான சிகிச்சை இது.