Home பெண்கள் அழகு குறிப்பு பருக்களால் உண்டான தழும்புகளுக்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்

பருக்களால் உண்டான தழும்புகளுக்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்

24

சிகிச்சைகளைச் செய்ய ஆரம்பித்தால், அவை பெரிதாகாமலும் நிரந்தரமாகத் தங்காமலும் காக்கலாம்.

நெருஞ்சி முள் தூள் 100 கிராம், கறிவேப்பிலை தூள் 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் தூள் 100 கிராம், கசகசா தூள் 10 கிராம் ஆகியவற்றை காய்ச்சாத பாலில் குழைத்துக் கொள்ளவும், இரவு படுக்கப் போவதற்கு முன் சருமத்தில் தழும்புகளின் மேல் தடவிக் கொண்டு தூங்கவும்.

மறுநாள் காலையில் அதைத் தேய்த்துக் கழுவவும். சில நாட்களுக்குத் தொடர்ந்து இப்படிச் செய்து வர, சின்னத் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். முகச் சருமத்தை லேசாக, மிக மென்மையாகக் கிள்ளி விடுகிற சிகிச்சையை 20 வயதுக்கு மேல் எல்லோருமே ஒரு பயிற்சியாகச் செய்யலாம்.

சருமத்தின் மூன்றாவது அடுக்கான சப்கியூட்டேனியஸ் லேயரில்தான் சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் எனப்படுகிற கொழுப்பு செல்கள் இருக்கின்றன. லேசாகக் கிள்ளி விடுவதன் மூலம் இந்த செல்கள் தூண்டப்பட்டு மேலெழுந்து வரும்.

கன்னம் ஒட்டிப் போனவர்கள் கூட இந்த கிள்ளி விடுகிற பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், கன்னங்கள் ஓரளவு உப்பிப் பூரிக்கும். முகத் தசைகள் விரிவடைகிற போது, தழும்புகளின் அளவு சுருங்கும். பார்வைக்கு உறுத்தலாகத் தெரியாது.

தினசரி காலையில் பல் துலக்கும் போது, வாய் நிறைய தண்ணீரை வைத்துக் கொள்ளவும். வாய் வலிக்கும் வரை வாயிலேயே வைத்திருந்து விட்டு பிறகு துப்பவும். இப்படிச் செய்வதாலும் கன்னத் தசைகள் விரிவடையும். தழும்புகள் மறையும்.