Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பயணத்தின் போது எப்படி டையட்-ல இருக்கணும்?

பயணத்தின் போது எப்படி டையட்-ல இருக்கணும்?

11

உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருக்கும் போது வெளியே நண்பர்களுடன் பிக்னிக் போனாலோ அல்லது எங்கேனும் ஊருக்கோ அல்லது வெளியே சென்றாலோ, அப்போது உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது என்பது கடினம். அப்போது தான் நம் கண்களுக்கு விதவிதமான சுவையான உணவுகள் எல்லாம் கண்களில் படும். அதைப் பார்க்கும் போது பசியும் அதிகம் உண்டாகும். ஆனால் அவற்றை உண்டால் உடல் எடையை குறைக்க இருக்கும் டையட் பாழகிவிடும். ஆகவே பயணத்தின் போது உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்ற, கண்ணில் படும் உணவுகளையெல்லாம் உண்ணாமல் இருக்க சில டிப்ஸ் இருக்கிறது.
டையட்-ல இருக்க சில டிப்ஸ்…
1. பயணம் செய்யும் போது தானியங்களான வேக வைத்த சுண்டல், பட்டாணி போன்றவற்றை எடுத்து செல்லலாம். எப்போது தெருவில் விற்கும் தின்பண்டங்களை பார்க்கும் போது பசிக்கிறதோ, அப்போது அந்த தானியங்களை சாப்பிடலாம்.
2. பஸ்ஸில் செல்லும் போது கடையில் விற்கும் பொருட்களை தான் சாப்பிட வேண்டுமென்றால், அப்போது கண்டதை சாப்பிடாமல் நிலக்கடலை, மக்காச்சோளம் அல்லது வெள்ளரிக்காய் போன்றவற்றை வாங்கி சாப்பிடலாம். இதுவும் ஒரு சிறந்த டையட் மேற்கொள்வோருக்கான உணவாகும். இதை சாப்பிட்டால் பசியும் குறையும்.
3. என்ன சாப்பாடு சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா? சாப்பாடு வேண்டுமென்றால் வீட்டில் இருந்தே தயாரித்து கொண்டு வரலாம். அதுவும் நறுக்கிய காய்கறிகளோடு, ராகியை உருண்டை அல்லது ரொட்டியை கொண்டு செல்லலாம். அதுவும் ராகி உருண்டையானது காய்கறியை வேக வைத்த தண்ணீரை ஊற்றி செய்தால் மிகவும் நல்லது. மேலம் அப்போது அரிசி உணவை உண்ண வேண்டாம்.
4. விமானத்தில் செல்வதாக இருந்தால், அப்போது சாலட், பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அப்போது எண்ணெயில் பொரித்த உணவுகள் எதையும் உண்ண வேண்டாம்.
5. மேலே சொன்ன அனைத்தையும் விட மிகவும் சிறந்த ஒன்று எது என்றால், அது பயணத்தின் போது பாட்டை கேட்பது, புத்தகத்தை படிப்பது அல்லது லேப் டாப்பில் படங்களை பார்ப்பது போன்றவையே. ஏனெனில் கண் பார்பதாலும், மனதானது அலை பாய்வதாலும் தானே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது, ஆகவே மனதை அமைதிப்படுத்த, இது ஒரு மிகவும் சிறந்த வழியாகும்.
7. எங்கேனும் பெரிய ஷாப்பிங் மாலுக்குள் செல்லும் போது நடந்து செல்வதே மிகவும் சிறந்தது. அப்போது லிப்ட் அல்லது எஸ்கலேட்டர் போன்றவற்றை தவிர்த்து நடந்தால் அது உடலுக்கு மிகவும் நல்லது, அதிலும் டையட்-ல் இருப்பவர்கள் செய்தால் எடையும் குறையும்.