Home பெண்கள் உடல் கட்டுப்பாடு நோய்கள் வராமல் பாதுகாக்க உடற்பயிற்சி அவசியம்

நோய்கள் வராமல் பாதுகாக்க உடற்பயிற்சி அவசியம்

33

b2607f37-2ed2-48c9-b1e8-38da5b45e107_S_secvpfஆண்களுக்கும், பெண்களுக்கும் சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை போதுமான உடற்பயிற்சியின்மையும்,

உடல் பருமனும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இதய பகுதிக்கு வலுவளிக்கும் பயிற்சிகள் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். அவற்றைத் தவற விடாதீர்கள்.

நீங்கள் இதயத்

துடிப்பு அதிகரிப்பதை உணரும் வகையில், வியர்க்கும் வகையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இடையிடையே

உங்களால் பேச முடிகிற அளவுக்கு இருக்க வேண்டும். தொந்தியைக் கரைப்பதற்கு சற்று அதிக காலம் ஆகும். ஆனால் அது முடியாத

காரியமல்ல. சரியான அணுகுமுறையின் முலம் நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒவ்வொரு நாளும் அளவான உணவை உண்டு போதுமான உடற்பயிற்சியைத் தவறாமல் செய்தல் வேண்டும்.

உடலுறுதி தாங்கும் சக்தி, வளையும் தன்மை, தியானம், மூச்சுப்பயிற்சி என்று அமைந்த உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து உடற்பயிற்சி

செய்வது நல்லது.

மனித வாழ்வின் நோய்கள் உடலை அண்டாமல் பாதுகாக்க உடற்பயிற்சி மிக அவசியம். பொருள் தேடி வாழவும் உடம்பு தான்

மூலகாரணமாகிறது.

பொருள் தேட வேண்டுமானால் முறையாக உழைக்க வேண்டும். முறையாக உழைப்பதற்கு நல்ல ஆரோக்கியமான

உடல் வேண்டும். இல்லாவிடில் நோயினால் பீடிக்கப்பட நேரிடும். நோயினால் பீடிக்கப்பட்ட உடலோடு நிம்மதியாக வாழவே முடியாது.

உடல்நலம் என்பது சில நாட்கள் மட்டும் பேணிக் காக்கப்பட வேண்டியது அல்ல. தொடர்ந்து பராமரிக்கப்படுதல் வேண்டும்.