Home சமையல் குறிப்புகள் நெல்லிக்காய் ஊறுகாய்

நெல்லிக்காய் ஊறுகாய்

20

தேவையான பொருள்கள்:

நெல்லிக்காய் – 15

மிளகாய் வற்றல் – 10 – 12 (காரத்திற்கேற்ப)

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

பெருங்காயத் தூள் – அரை தேக்கரண்டி

பூண்டு – 8 – 10 பல்

நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி

கடுகு – அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை – 2 இணுக்கு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மிளகாய் வற்றலை வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்து பொடிக்கவும். (வாணலியில் வறுக்காமல் மிளகாய் வற்றலை வெயிலில் காயவைத்தும் பொடிக்கலாம்).

நெல்லிக்காயை 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். வேக வைத்த நெல்லிக்காயில் விதையை நீக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து பூண்டை நசுக்கி சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.

பின் நெல்லிக்காய், மிளகாய் பொடி, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

அனைத்தும் ஒன்று சேர்ந்து நன்றாக வதங்கி பச்சை வாசனை போனதும் இறக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகித்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

நெல்லிக்காய் உடல் நலத்துக்கு ரொம்ப நல்லது.

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற

எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்