Home உறவு-காதல் நெருக்கம் உறவில் பெரும் அதிசயங்களை உண்டு பண்ணும்….

நெருக்கம் உறவில் பெரும் அதிசயங்களை உண்டு பண்ணும்….

14

திருமண உறவில் தம்பதியர் இருவரும் ஒருவருக்கொருவர் சரி சமமான கவனிப்பை தங்களுக்குள் கொடுக்க வேண்டியது அவசியம். ஒரு கணவராக நீங்கள் கொடுக்கும் அன்பைக் காட்டிலும் அதிகமான அன்பை உங்கள் மனைவியிடமிருந்து எதிர்பார்ப்பது இயற்கை. உங்களையும், உங்களது தேவைகளையும் உங்கள் துணைவியாரும் சிறப்பாக செய்து வருவார்.

உங்களது மனைவியின் தேவைகளை நீங்கள் கவனித்துக் கொண்டால், அவர் உங்களை இன்னும் அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்வார். ஆதலால் திருமண வாழ்க்கையில் உங்களது மனைவியை நிறைவாகவும் சந்தோஷமாகவும்; வைத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களது துணைவியார் உங்களுடனான உறவை மேம்படுத்திகொள்ள எவ்வளவு முயற்சி மேற்கொள்கிறார் என்பதை நீங்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் உங்கள் மனைவியின் செயலை குறைவாக மதிப்பிட்டு விட்டு, காரணமின்றி மேலும் அவருடைய கவனம் வேண்டும் என்று நினைப்பீர்கள்.

கணவரை விரும்பும் மனைவியானவள் எப்பொழுதும் யாரும் எதிர்பார்ப்பதை விட அதிக கவனத்தை தங்கள் கணவருக்கு கொடுக்கவே விரும்புவார்கள். ஆதலால் நீங்கள் அவரிடம் எந்த அளவிற்கு கவனத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று எதிர்பார்க்கும் முன்னரே தெரிந்திருத்தல் முக்கியமானதாகவும்.

கணவன் மனைவி உறவு மிகவும் மென்மையான உறவாகும். மனைவியிடம் அன்பை எதிர்பார்க்கும் போது, அதே அளவு அன்பை நீங்களும் அவளுக்கு கொடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் நோய்வாய்பட்டிருக்கும் போது உங்கள் மனைவி எப்பொழுதுமே அருகில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். அவர்களது அன்பார்ந்த மற்றும் தன்னலமற்ற கவனிப்புக்கு பதிலாக, அவள் உங்களுக்கு மிகவும் முக்கியமானவள் என்பதை உணர்த்துமாறும் மற்றும் அவளை சந்தோஷமாக வைத்திருக்குமாறும் நீங்கள் செய்ய வேண்டிய குறைந்த பட்ச செயலாகும்.

பொதுவாக பெண்கள் அதிகம் பேச விரும்புவார்கள். இவ்வாறு தான் தங்களது இதயத்தை திறந்து பேசவும் மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் செய்வார்கள். உங்களுடன் பேசுவதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் கொடுக்க முனைவார்கள். உங்களுடைய அன்பையும் மற்றும் அவளுக்கான நெருக்கமான உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பேசுங்கள்.

பெண்ணுக்கு உரிய அன்பையும், கவனிப்பையும் நீங்கள் பரிமாறும் போது தான், உங்களது பங்கை அவளிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியும். அவளின் தேவைகளையும் உணர்வுகளையும் அனுதினமும் தெரிந்து கொள்ளுங்கள். திருமண உறவில் தனிமையை உணராதவாறு உங்கள் துணைவியை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

சில சமயங்களில் மனைவியர் காட்டும் அபரிமிதமான அன்பையும் அக்கறையையும் நீங்கள் உணருவதில்லை. நீங்கள் அவருக்கு முக்கியமானவர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களையும் சற்றே கவனித்து, அவற்றை மகிழ்ந்து அனுபவியுங்கள்.

உங்களை கவனிப்பதில் இருந்தும் மற்றும் உங்களுடைய தேவைகளை கவனிப்பதில் இருந்தும் உங்களுடைய மனைவிக்கு சுதந்திரமும், ஓய்வும் அவசியம் தேவை. அவளை அவளது பெற்றோரின் வீட்டிற்கு வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது பெண்களுடன் இரவு நேரத்தை செலவிடவோ தொடர்ந்து அனுப்புவதன் மூலமாக புத்துணர்வும் எழுச்சியும் அவளுக்கு கிடைக்கும். இச்செயலால் மேலும் மேலும் உங்களை அவர் சிறப்பாக கவனிப்பார்.

உங்கள் உறவில் குறைகள் ஏற்படும் ஒவ்வொரு முறையிலும் அவர் மீது கொண்டுள்ள அன்பையும், உணர்வையும் அவளிடம் வெளிப்படுத்துங்கள். இச்செயலால் நீங்கள் அவள் மேல் அக்கறை கொண்டுள்ளதையும், அவளையும், அவளுடனான உறவையும் எப்போதும் நினைவில் வைத்திருப்பதையும் காண்பிக்க முடியும். அதிக கவனிப்பு உங்களுக்கு தேவையானால் அதையே அவளுக்கும் கொடுங்கள்.

திருமண வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதும் உங்கள் துணைவியிடம் உண்மையாக இருக்க வேண்டும். இது மகிழ்ச்சியான உறவுக்கு உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தும். உங்கள் மீதும், உங்கள் குணத்தின் மீதும் மனைவி நம்பிக்கை கொள்ளும் போது அவர் மிகுந்த அன்பையும், அக்கறையையும், கவனிப்பையும் வெளிப்படுத்துவார். ஏனெனில், அவர் காட்டும் அன்பு வீணாவதில்லை என்பதை அவள் உணர்ந்து கொண்டார்.

நெருக்கம் தங்கள் உறவில் பெரும் அதிசயங்களை உண்டு பண்ணும். நெருக்கமாக இருந்தால், அது உங்கள் மனைவியின் தனித்துவமான அன்பையும் அரவணைப்பையும் அள்ளித் தரும். உங்களிருவரைப் பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ளவும், இருவரின் தேவைகளையும் தெரிந்து கொள்ளவும் நெருக்கமாக இருக்கும் நேரங்கள் உதவும்.