Home ஆரோக்கியம் நிம்மதியா தூங்கணும்! ஏன் தெரியுமா?

நிம்மதியா தூங்கணும்! ஏன் தெரியுமா?

22

நாம் தினமும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக செயல்பட தூக்கம் மிகவும் அவசியம்.
தினமும் குறைந்தது 7-8 மணிநேரமாவது தூங்கினால் மட்டுமே உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கும்.

* சரியான அளவில் தூங்காவிட்டால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும். மேலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதோடு, மன அழுத்தத்தை உண்டாக்கும்.

* ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து, அதுவே உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும்.

* ஆழ்ந்த உறக்கத்தில் நம் மூளை அன்று நடந்த விஷயங்கள், உணர்ச்சிகள், ஒருசில நினைவுகள் போன்றவற்றை சேகரித்து வைக்கும் பணியில் ஈடுபடும். இப்படி செய்வதால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.

* தினமும் 7 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்கும் நபர்கள், உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது, எனவே நன்றாக தூங்கினால் உடல் பருமன் பிரச்னைக்கு குட்பை சொல்லலாம்.

* நிம்மதியாக தூங்கினால் உடலுக்கு போதிய ஓய்வு கிடைப்பதுடன், மனமும் சற்று ரிலாக்சாக இருக்கும், இதனால் நாம் ஆரோக்கியமாக இருப்பதுடன் முகமும் பொலிவுடன் இருக்கும்.