Home பெண்கள் உடல் கட்டுப்பாடு நிம்மதியாக தூங்க சில டிப்ஸ்

நிம்மதியாக தூங்க சில டிப்ஸ்

21

இரவு தூங்குவதற்கு முன், அதாவது இரண்டு மணி நேரத்திற்குள் டீ, காபி குடிக்க வேண்டாம்.

* இரவு, படுக்கைக்கு செல்லும் முன், மிதமான சூட்டில் பால் அருந்தவும்.

* சிலர் தூங்குவதற்கு முன், அன்று நடந்த விஷயங்களையும், மறுநாள் என்னென்ன செய்யலாம் என்று நினைத்து, டென்ஷனாகி கொண்டிருப்பர், கண்டிப்பாக அதையெல்லாம் தவிர்க்கவும்.

* ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளோர், கடவுளை நினைத்துக் கொள்ளலாம். அன்றைய பொழுது இனிமையாக சென்றதற்கு கடவுளுக்கு நன்றி கூறலாம்.

* படுக்கை அறையில் அதிகமான வெப்பமோ அல்லது அதிகமான குளிரோ இல்லாமல், மிதமான தட்பவெப்பம் இருப்பது நல்லது.

* சிந்தனையைத் தூண்டாத, மகிழ்ச்சி தரும் புத்தகத்தை படிக்கலாம்.

* மனசுக்கு இதமான இசையை கேட்பதும் நல்லது.