Home அந்தரங்கம் நம்ம ஊரில் நடந்தால் கில்மா காதல் .. வெளிநாட்டில் ஒரு வித நட்பு ..

நம்ம ஊரில் நடந்தால் கில்மா காதல் .. வெளிநாட்டில் ஒரு வித நட்பு ..

23

பொதுவாக நம்ம ஊர் காதல் கலாச்சாரத்தில் சொல்லப்படுவது ,என்னவென்றால் ,காதலர்கள் காதலை மட்டும் கொண்டாட வேண்டும் .
காமத்தை அல்ல என்று .நடைமுறையில் இந்த கோட்பாடை கொஞ்சம் கொஞ்சமாய் தகர்த்துகொண்டே இருக்கிறார்கள் இன்றைய காதலர்கள் .
காதல் என்று வந்துவிட்டால் ,காமம் வெளிப்படாமல் போவதில்லை .சரி ,அறிமுகமில்லாத ,ஆண்,பெண் இருவரும் ஒருவொருக்கொருவர் விருப்பபட்டு காமத்தை வெளிபடுத்தினாலும் ,அந்த இடத்தில் காதல் பூக்குமா ? பூக்காதா ? அதுதான் இந்த படத்தின் ஒன் லைன் கதை .

ஹீரோ வேலை விசயமாக , நியுயார்க் வருகிறார் .ஹீரோயின்தான் ஹீரோவுக்கு நேர்காணல் நடத்துகிறார் .ஹீரோ பளிச்சென இருப்பதால் ஹீரோயினுக்கு பிடிக்கிறது . நம்மூர் பெண்கள் சொல்வது போல் ,பிரெண்ட்சாக இருக்கலாமென சொல்லுகிறார் .ஹீரோவும் சம்மதிக்கிறார் .பல விஷயங்கள் பேசுகிறார்கள்.பேச்சு அப்படியே செக்ஸ் பக்கம் திரும்புகிறது .