Home பெண்கள் உடல் கட்டுப்பாடு நடைப்பயிற்சியில் நீங்கள் எந்த வகை?

நடைப்பயிற்சியில் நீங்கள் எந்த வகை?

11

நடைப்பயிற்சியில் மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடக்கிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை. உடல்வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவதோடு, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராமலும் பாதுகாக்கும்.

உடல் பருமன் உள்ளவங்களுக்கு ஏற்ற நடை இது. அடுத்து பவர் வாக்கிங்னு சொல்ற வேக நடை. கைகளையும் கால்களையும் வேகமா வீசி நடக்கிறது. இப்படி வேகமா நடக்கும் போது, உடம்புல உள்ள கழிவுகள் எரிக்கப்படும். வியர்வை அதிகம் வெளியேறி, உடம்பு சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று, தன்னம்பிக்கையை உயர்த்தி, உடம்புக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் இந்த நடை.

நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடை இது. மூணாவது ஜாக்கிங்னு சொல்ற மெதுவான ஓட்டம். வேகமா நடக்கிறவங்க, சில மாசங்களுக்குப் பிறகு வேகத்தைக் கொஞ்சம் கூட்டும்போது மிதமான, மிகமிக மெதுவான ஓட்டமா அது மாறும். இதனால நிறைய ஆக்சிஜன் நுரையீரலுக்குள்ள போய், அதன் விளைவா இதயத்துக்கு அதிக சுத்த ரத்தத்தை அனுப்பி, தேவையில்லாத அத்தனை கழிவுப் பொருள்களையும் வெளியேற்றி, உடம்புல உள்ள ஒவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.

இள வயதுக்காரங்களுக்கு ஏற்ற நடை இது. தினமும் அரை மணி நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை நடக்கலாம். இளவயசுக்காரங்க 1 மணி நேரமும், 30-40 வயசுக்காரங்க 45 நிமிடங்களும், 40 ப்ளஸ்ல உள்ளவங்க அரை மணி நேரமும், 50-60 வயசுக்காரங்க 20 நிமிடங்கள் நடந்தால் போதுமானது.