Home குழந்தை நலம் தேங்க்ஸ் சொல்ல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்!

தேங்க்ஸ் சொல்ல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்!

18

நம் குழந்தைகள் அனைவரும் பாராட்டும் வகையில் நல்லவர்கள் ஆவதும், அடுத்தவர்கள் தூற்றும் வகையில் நடந்து கொள்வதும் பெற்றோர்களின் வளர்ப்பில்தான் இருக்கிறது. பள்ளிகளுக்கு செல்லும் முன்பாகவே நம் குழந்தைகளுக்கு நற்பண்புகளை கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் பள்ளிகளிலோ, பொது இடங்களிலோ நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்ள முடியும்.

நன்றி சொல்ல கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு ப்ளீஸ், தேங்க்ஸ் என்ற வார்த்தையை முதலில் கற்றுக்கொடுங்கள். யாரிடமாவது எதையாவது கேட்டுப்பெரும்போது இந்த வார்த்தைகள் உதவும். யாராவது உதவி செய்தால் மறக்காமல் நன்றி சொல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்

டேபிள் மேனர்ஸ்

ஓரு குறிப்பிட்ட வயதுவரை குழந்தைகளுக்கு நாம் ஊட்டி விடுவோம். அவர்களாக சாப்பிடப் பழகிய உடன் வீட்டிலோ, பொது இடத்திலோ எப்படி சாப்பிடவேண்டும், எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள்.

பிறந்தநாளை நினைவூட்டுங்கள்

குழந்தைகளின் நண்பர்களின் பிறந்தநாளை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். தேதிகளை நினைவூட்டும் வகையிலான விளையாட்டுக்களை கற்றுக்கொடுங்கள். நண்பர்களின் பிறந்தநாளுக்கு சிறந்த பரிசுப்பொருளை அளிக்குமாறு அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

நல்ல வார்த்தைகள்

குழந்தைகள் முன்னிலையில் எப்போதும் நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள். சிரிப்பிற்காகவும், வேடிக்கைக்காகவும் பேசும் பேச்சுக்கள் பின்னர் அவர்களை சிக்கலில் கொண்டுபோய் விடும். எனவே நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுமாறு அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

குறை கூற வேண்டாமே

சின்னக்குழந்தைகள் யாரையாவது பட்டப்பெயர் வைத்து அழைத்தால் அதை என்கரேஜ் செய்யவேண்டாம். அது பெரியவர்கள் ஆன பின்னரும் தொடர வழி ஏற்படும். அடுத்தவர்களின் மனது புண்படும்படி பேசக்கூடாது என்பதை கற்றுத்தரலாம்.

எக்ஸ்க்யூஸ் மீ

நன்றி கூறவும், ப்ளீஸ் சொல்லவும் எப்படி கற்றுத் தருகிறோமோ அதேபோல எக்ஸ்க்யூஸ் மீ என்ற வார்த்தையை, அதன் உபயோகத்தை கற்றுக்கொடுங்கள். இது உங்கள் குழந்தையின் மீதான மதிப்பை உயர்த்த உதவும். பொது இடத்தில் எப்படி பேசவேண்டும். தேவையற்ற சேட்டைகளை குறைத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு பழக்கங்களை கற்றுக்கொடுப்பது குழந்தைகளுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்.