Home சமையல் குறிப்புகள் தீபாவளி சமையல்,ஆஷா மகாராஜாவின் தீபாவளி சமையல்

தீபாவளி சமையல்,ஆஷா மகாராஜாவின் தீபாவளி சமையல்

20

தீபாவளி இந்துக்களின் மிகப்பெரிய திருவிழா. இந்த மகிழ்ச்சியான நாளின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக வண்ணமயமான பாரம்பரிய உடைகளை அணிந்தும், வானவேடிக்கை மற்றும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுகின்றனர். இவை எல்லாம் இருக்கும் போது இனிப்புகள் இல்லாமலா, அருமையான இனிப்பு வகைகளும், கார வகைகளும் முதலில் இடம் பெறுவது இந்த தீபாவளி திருநாளில் தான். இங்கே உங்கள் தீபாவளி நாளுக்கு அழகு சேர்ப்பது போல சமையல் கலை நிபுணர் ஆஷா மகாராஜின் இரண்டு எளிதான சமையல் தரப்பட்டுள்ளது.
எளிதாக செய்யக்கூடிய பர்பி:
பர்பி இல்லாமல் தீபாவளியா, இது குடும்பதினர் அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு, இதை செய்யவதில் ஒரு தந்திரம் இருக்கிறது. இங்கே நமக்கு சமையல் கலை நிபுணர் ஆஷா மகாராஜ் பர்பி செய்வதற்கான எளிய முறைகளை நமக்கு கூறியுள்ளார்.:

தேவையான பொருட்கள்:
1 கப் பால்
2 கப் சர்க்கரை
125 கிராம் வெண்ணெய் அல்லது நெய்:
1 தேக்கரண்டு பாதாம் எசன்ஸ்
அரை கப் தேங்காய்:
500 கிராம் முழு கிரீம் பால் பவுடர்
கால் கப் நன்கு பொடி செய்த பாதாம்:
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரை கலந்து கொண்டு மிதமான தீயில் ஒரு கொதி வரும் வரை நன்கு சூடுபடுத்திக் கொண்டு கிளறி கொள்ளவும்.:
பிறகு சூட்டினை அதிகப்படுத்தி 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.:
இதனுடன் வெண்ணெய் சேர்த்து உருக்கவும்.: வெண்ணெய் உருகியதும் இதனுடன் பாதாம் எசன்ஸ் மற்றும் தேங்காய், பால் பவுடர் இவற்றை கலந்து கொள்ளவும்.
அடுப்பிலிருந்து இதை இறக்கி நன்கு கிளறி விட்டு, ஒரு அகன்ற ஆழமான தட்டில் இந்த கலவையை ஊற்றவும்.
பொடித்து வைத்துள்ள பாதாமை ஒரே மாதிரி கலவை மேலே தூவி விட்டு, ஆறாவிட்டு அழகான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்::