Home பாலியல் திருமணத்திற்குப் பின்னும் சுய இன்பம் காண்பது அவசியமா?

திருமணத்திற்குப் பின்னும் சுய இன்பம் காண்பது அவசியமா?

42

பெண்கள் பலரும் திருமணத்திற்கு பின்னர் சுய இன்பம் காண்பதில்லை. திருமண வாழ்க்கையில் நல்ல திருப்தி உண்டாகவில்லை என்றால் சுய இன்பம் காண்பதில் ஒரு அர்த்தம் உள்ளது. திருப்தி இருந்தாலும் கூட ஏன் சுய இன்பம் காண்பது முக்கியமானதாகிறது என்று பலருக்கும் கேள்விகள் இருக்கும். இந்த பகுதியில் திருமணத்திற்கு பின்னரும் கூட பெண்கள் இதனை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாதாரணமானது..
பெண்கள் திருமணத்திற்கு முன்பு சுய இன்பம் காண்பதற்கும் திருமணத்திற்கு சுய இன்பம் காண்பதற்கும் இடையே முரண்பாடு காணப்படுகிறது. உடலுறவு மற்றும் சுய இன்பம் இரண்டும் வேறுபட்டவை. சுய இன்பம் செய்தால், பெண்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தமாகாது. உலகிலேயே தலைசிறந்தவரை திருமணம் செய்து கொண்டாலும் கூட திருமணத்திற்கு பின்னர் சுய இன்பம் செய்யலாம்.

உடலுறவு மேம்படும்
பெண்கள் திருமணத்திற்கு பின்னரும் கூட சுய இன்பம் காண்பதால், உடலுறவில் அவர்களது செயல் திறன் மேம்படுகிறது. பெண்களுக்கு உடலுறவில் என்ன தேவை என்பதும் இதன் மூலம் தெளிவாக தெரிந்துவிடும்.

உச்சமடைதல்..!
பல ஆண்கள் தன் மனைவியின் தேவை அறிந்து செயல்படுகின்றனர். ஆனால், சில பெண்கள் உடலுறவின் போது உச்சமடைவதில்லை. அவர்கள் உச்சமடைய சுய இன்பம் உதவுகிறது.

மன அழுத்தம்
பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு அதிக வேலைச்சுமை மற்றும் பொறுப்புகள் பெண்களுக்கு அதிகரிக்கிறது. இதிலிருந்து விடுபட சுயஇன்பம் உதவியாக இருக்கிறது.

உறக்கம்
மிக அதிக வேலைப்பளு, மன அழுத்தம் இருந்தால் தூக்கம் வராது. அதவும் அருகில் இருக்கும் கணவர் குறட்டை விட்டால் கண்டிப்பாக பெண்களுக்கு தூக்கம் வராது. இந்த சூழ்நிலையில் பெண்கள் சுய இன்பம் செய்வது நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும். ஆனால் இதனையே தூக்க மாத்திரை போல் அன்றாடம் உபயோகிக்க கூடாது. பால் அருந்துவதும் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.