Home சூடான செய்திகள் தினமும் உடலுறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும்..?

தினமும் உடலுறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும்..?

85

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உடலுறவு கொள்கிறோமோ, அந்தளவு உடலுக்கும் ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் கிடைக்க உதவியாக இருக்கும். தினமும் உடலுறவு கொண்டால், பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளான சளி மற்றும் தலைவலி போன்றவை வராமல் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வில் ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போது, நம் உடலில் ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இந்த ஹார்மோனானது மூளைக்கு உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யுமாறு ஒருவித சமிக்ஞையை அனுப்பும்.

இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் நீங்கி, உடலானது ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும். தினமும் உடலுறவில் ஈடுபடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

உடலுறவு கொள்ளும் போது, உடலில ஒருசில நல்ல ஹார்மோன்களுடன், அவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். அன்றாடம் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், இரத்தமானது இரத்த நாளங்களில் சீராக உந்தப்படுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்..

ஆனால் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே உடலுறவில் ஈடுபட வேண்டும். பெண்கள் மாதவிடாய் நெருங்கும் ஒரு வாரத்திற்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், மாதவிடாயின் போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் இருக்கும்..

மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் வராது. தினமும் உடலுறவு கொண்டால், மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்பிடிப்பு ஏற்படாது. அன்றாடம் 30 நிமிடம் உடலுறவு கொண்டால், 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்ததற்கு சமம்.

இதனால் உடல் நன்கு ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலமானது ஊக்குவிக்கப்பட்டு, அதன் சக்தியானது அதிகரிக்கும். வாரத்திற்கு இரண்டு முறைக்கு குறைவாக உறவு கொள்பவரை விட, அதிகமாக உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு, பக்கவாதம் வரும் வாய்ப்பானது குறைவாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.

பெண்கள் அன்றாடம் உடலுறவு கொள்ளும் போது, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதால், எலும்பின் அடர்த்தியானது அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை வருவது தடுக்கப்படும்.