Home அந்தரங்கம் தினமும் உடலுறவின்போது உச்சம் பெற வேண்டியது அவசியமா? ஏன்?

தினமும் உடலுறவின்போது உச்சம் பெற வேண்டியது அவசியமா? ஏன்?

38

உடலுறவு என்பதும் ஒருவகையான உடற்பயிற்சி தான். உடற்பயிற்சி என்பதே உடலும் மனமும் ஒருங்கிணைவது தான். ஆனால் மற்ற உடற்பயிற்சிகளைவிட உடலுறவில் தான் மனமும் உடலும் முழுமையாக ஒன்றியிருக்கும்.

புதுமணத் தம்பதிகள் பொதுவாக மிக ஆரோக்கியமாக இருப்பார்கள். திருமணமான புதிதில் விருந்து, கொண்டாட்டங்கள் என மகிழ்ச்சியாக இருப்பது தான் காரணம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அது உண்மையல்ல. புதுமணத் தம்பதிகள் கட்டிலைவிட்டுப் பிரிந்திருக்கும் நேரம் மிக மிகக் குறைவு . அதுதான் அவர்களுடைய ஆரோக்கியத்துக்குக் காரணம்.

அதனால் தினமும் ஒருமுறையாவது உடலுறவு கொள்வது நல்லது. அதனால் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உண்டாகின்றன.

ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் நம்முடைய உடலில் ஆக்சிடாசின் என்னும் ஹார்மோன் மிக அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. இந்த ஹார்மோன் மூளையை அமைதியாக வைத்திருக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும்.

உடலில் உண்டாகும் நோய்த்தொற்றுகள் குறையும். உடலில் சுரக்கும் ஹார்மோன்களுடன் சேர்ந்து சில சேர்மங்களும் சுரக்கும். அவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

உடலுறவில் ஈடுபட்டு உச்சகட்டத்தை எட்டும்போது தான் ஆக்சிடோசின் சுரக்கும் அறவு அதிகரிக்கும். அதனாலேயே உடலுறவில் உச்சத்தை எட்டியவுடன் ஆண்கள் நிம்மதியாகத் தூங்கிவிடுகிறார்கள்.

ரத்த நாளங்கள் சீராக்கப்பட்டு இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

உடலுறவு என்பது அந்த குறிப்பிட்ட நேரம் மட்டும் இன்பம் கொடுப்பது அல்ல. ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சீராக்கப்படும். அதனால் தினமும் உடலுறவு கொள்வது அவசியம்.

பெண்கள் குறிப்பாக, மாதவிலக்கு நெருங்கும்போது உறவு கொண்டால், பெண்களுக்கு உண்டாகிற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சீராகும்.

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உறவு கொள்வதன் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சி உண்டாவதால் பக்கவாதம் போன்றவற்றிற்கான வாய்ப்புகள் குறைந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.

ஆண்களுக்குப் பெரும்பாலும் ஆணுறுப்பில் விறைப்புத் தன்மை உண்டாகாமல் உறவில் ஈடுபடும்போது முழுமையான இன்பத்தை அடைய முடியாமல் போவதுண்டு. ஆனால் தினமும் உடலுறவு கொள்வதால் விறைப்புத் தன்மையில் பிரச்னையே இருக்காது. தங்களுடைய எண்ணம் போல் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய ஆணுறுப்பை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.