Home குழந்தை நலம் தாய்ப்பாலின் அவசியம் பற்றி நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

தாய்ப்பாலின் அவசியம் பற்றி நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

25

captureகுழந்தைக்கு தாய்ப்பால் சிறந்த ஊட்டச்சத்தாக இருப்பது மட்டுமல்லாமல் பல சுகாதார பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் அல்லாத பிற வகை பால்கள் குழந்தைகளுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த அபாயம் கிடையாது. புட்டிப்பால் அருந்துவதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு முதல் 12 மாதங்களுக்குள் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்கள் உண்டாவதில்லை என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அத்துடன், குழந்தைகளுக்கு தாய்ப்பாலை நேரடியாகப் புகட்டாமல் பாட்டில்களில் அடைத்துக் கொடுத்தால் அவர்களது செவித்திறன் பாதிக்கப்படும் தற்போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 491 தாய்மார்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் நான்கில் மூன்று பெண்கள் குழந்தையின் முதல் 12 மாதங்களில் தாய்ப்பாலை நேரடியாகவும், சிலர் மார்பகங்களின் மூலமும் சில சமயங்களில் பாட்டில்களிலும் என வெவ்வேறு முறைகளைக் கையாளுகின்றனர்.

தொடர்ச்சியாக, ஒரு மாதம் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கு காதுகளில் உண்டாகும் நோய்த்தொற்று நான்கு சதவீதம் வரை குறைகிறது. மேலும் ஆறு மாதங்கள் வரை பாலூட்டப்பட்ட குழந்தைகளுக்கு 17 சதவீதம் வரை நோய்த்தொற்ற குறைந்திருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பபட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பாலையே பாட்டில்களில் அடைத்துக் கொடுக்கப்பட்டது. முதல் ஒரு மாதத்தில் அந்த குழந்தைகளுக்கு காதுகளில் ஏற்படும் நோய்த்தொற்று 14 சதவீதம் அதிகரித்தது. அதேசமயம் ஆறு மாதங்கள் வரை கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 115 சதவீதம் வரை நோய்த்தொற்றுகள் அதிகமாயின.

”பாட்டில்களில் பாலூட்டுவதால் ஏன் செவித்திறனை பாதிக்கிறது என்பது முற்றிலுமாக அறிந்து கொள்ள இயலாது போனாலும், பாட்டில்களில் பாலூட்டும்போது, அவை எதிர்மறை அழுத்தங்களை உண்டாக்குகின்றன.

குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் வரை வேறு எந்த வழிகளிலும் இல்லாமல் மார்பகங்களின் வழியாக மட்டும் தாய்ப்பால் கொடுக்கப்படும் பொழுது, குழந்தைகளுக்கு 30 சதவீதம் வரை வயிற்றுப்போக்கு உண்டாவது தவிர்க்கப்படுகிறது.