Home பெண்கள் தாய்மை நலம் தாய்க்கு வேண்டிய பொருட்கள்

தாய்க்கு வேண்டிய பொருட்கள்

30

தாய்க்கு: வாங்க வேண்டிய மற்றும் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்.

நைட்டி :முன் பக்கம் ஜிப் வைத்த அல்லது பீடிங் (முன் பக்கம் ஒரு ஜிப் மற்றும் பீட் பண்ண வசதியாக மார்பகத்துக்கு பக்கத்தில் 2 ஜிப் வரும்)நைட்டி . சிசேரியன் என்றால் முன் பக்கம் புல் ஓபன் நைட்டி தேவைப்படும். இப்போதைக்கு புல் ஓபன் நைட்டி ஒன்று வாங்கி கொள்ளுங்கள். பின்னர் தேவை எனில் வாங்கி கொள்ளலாம்.
பீடிங் பிரா : கடைசி மாதத்தில் வாங்குங்கள். அப்பொழுது நீங்கள் அணியும் ப்ரேசியரின் அளவை விட ஒரு அளவு அதிகம் வாங்கினால் சரியாக இருக்கும். எடுத்துகாட்டாக 32 அளவு உபயோகிப்பவர்கள் 34 அளவு வாங்க வேண்டும்.
சுடிதார்: முன் பக்கம் ஹூக் வைத்து சில சுடிதார் தைத்து கொள்ளுங்கள். வெளியில் போகும் பொது பீட் பண்ண வசதியாக இருக்கும். கொஞ்சம் லூஸ் வைத்து தைத்து கொள்ளுங்கள்.
வெளி நாட்டில் இருப்பவர்கள் maternity dresses பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.
disposable panties – 20
maternity நாப்கின்ஸ்- 20 pack ஒன்று
Toiletries பேகில் உங்களுக்கு தேவையான சீப்பு, சோப்பு,பவுடர், டிஒட்ரன்ட் , பொட்டு, பேண்ட், கிளிப்ஸ்,பிரஸ், பேஸ்ட் போன்றவற்றை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
திஸ்ஸூ பேப்பர் ஒரு பாக்.
டவல் & கை துவலை-2
பிரஸ்ட் பேட்: தேவையெனில் வாங்கி கொள்ளுங்கள்.
பாத்ரூம் ஸ்லிப்பெர்ஸ்: மருத்துவமனைக்கு எடுத்து செல்ல.
சேர் குசன்: இரண்டு எடுத்து கொண்டால் குழந்தைக்கு பீட் பண்ணும் பொழுது கிழே ஒன்றும், முதுக்கு ஒன்று வைத்து கொண்டால் வசதியாக இருக்கும். நோர்மல் டெலிவரிகு பின் தையல் போடப்பட்டு இருந்தால் சேரில் குசன் வைத்து அமர்ந்தால் வலி குறைவாக இருக்கும்.