Home பாலியல் தாம்பத்தியத்தை குறித்த இந்த 12 விடயங்களை யாரும் உங்களிடம் கூறமாட்டார்கள்!

தாம்பத்தியத்தை குறித்த இந்த 12 விடயங்களை யாரும் உங்களிடம் கூறமாட்டார்கள்!

25

better_sex_landscapeதிருமண வாழ்க்கை என்பது சொர்க்க வாசல், வாழ்க்கையின் அடுத்தக்கட்டம், இது புதிய வாழ்க்கையின் ஆரம்பம். அனைவரின் வாழ்க்கையிலும் இது திருப்புமுனையாக அமையும் என பலவாறாக உசுப்பேற்றி விடுவார்கள்.

ஆனால், யாரும் திருமண வாழ்க்கையில் எந்தெந்த மாதிரியான சூழல்கள் வரும். அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என கூறமாட்டார்கள்.

திருமணமான முதல் மூன்று மாசம் எந்த சூழ்நிலை மாற்றங்களும் ஏற்படாது. ஏனெனில், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என ஆள் மாற்றி ஆள் நம்மை தாங்கோ தாங்கென தாங்கிக் கொண்டிருந்திருப்பார்கள்.

இதற்கு பிறகு நீ, நான், நாம் என்ற கட்டத்தில் நுழையும் போது தான் சிற்சில பிரச்சனைகள் தலைதூக்கி பார்க்கும். இந்த நேரத்தில் நீங்கள் அந்த சூழல்களை எப்படி கையாள்கிறீர்கள் என்பதில் தான் உங்களது இல்லறத்தின் தரம் மற்றும் வெற்றி சார்ந்திருக்கிறது…

1.
தாம்பத்தியம்:
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள், இது திருமணத்திற்காகவே எழுதி வைத்த பழமொழி. இந்த ஆசை மற்றும் மோகத்தை தாண்டி நீங்கள் நடத்தும் இல்லறம் தான் மாயை அற்ற உண்மையான இல்வாழ்க்கை. இதை கடந்து இல்லறத்தை வெற்றிகரமாக நடத்திவிட்டாலே நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

2.
கடினமான சூழல்:
திருமணதிற்கு பிறகு அனைத்து நாட்களும் நீங்கள் இருவரும் சந்தோசமாகவே இருப்பீர்கள் என்று எண்ண வேண்டாம். கடின சூழல்களும் வரும். அது பொருளாதாரம், உறவுகள், உடல்நலம் என எதுவாகே வேண்டுமானாலும் இருக்கலாம். அதை நீங்கள் கையாள தெரிந்திருக்க வேண்டும். அல்லது கற்றுக் கொள்ளவாவது வேண்டும். இல்லையேல் சிக்கல் தான்.

3.
இருமனம்:
இருமனமும் சிறந்து காணப்பட்டால் தான் அது நல்ல திருமண வாழ்க்கை. ஒருவருக்கு ஒருவர் உதவுதல், அரவணைத்து கொண்டு செல்லுதல் என, தான் என்ற எல்லையை கடந்து நாம் என்ற எல்லைக்குள் நீங்கள் குடிப்பெயர்ந்து செல்ல வேண்டும்.

4.
எப்போதும் காதல்?
24×7 யாராலும் காதலித்துக் கொண்டே இருக்க முடியாது. அவரவர் கால சூழ்நிலைகளை புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஆறுதலாக பேச வேண்டும், சில நேரங்களில் பொறுமையாக அமைதிக் காக்க வேண்டும்.

5.
போதும்?
“போதும்ப்பா சாமி இந்த வாழ்க்கை, இத்தோட முடித்துக் கொள்வோம்..” என்ற எண்ணம் கூட பிறக்கலாம். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி பயணிக்க வேண்டுமே தவிர முறைத்துக் கொண்டும், முறித்துக் கொள்ளலாம் என்றும் நினைக்க கூடாது.

6.
மாற்றங்கள்:
வேறு நபர்கள் மீது ஆசை, எண்ணங்கள் அலைபாய வாய்ப்புகள் இருக்கிறது. இது நேராமல் இருக்க நீங்கள் இருவரும் என்றும் புதுமையாக இருக்க வேண்டும்.

.
7.
பெற்றோர்:
தனிக் குடித்தனம் வாழும் தம்பதியர் மத்தியில் திடீரென சில உறவு / தொழில் ரீதியான சிக்கல்கள், பிரச்சனைகள் வரும் போது பெற்றோருடன் சென்றுவிடலாம் என்று கூட தோணும். ஆனால், நீங்கள் தான் துணையாக இருந்து பக்கபலமாக இருக்க வேண்டும்.

8.
பணம்:
உன் பணம், என் பணம் என்று ஏதுமில்லை. நம்முடையது, நாம் மட்டுமின்றி நம்மிடம் இருக்கும் பொருள்கள், உறவுகள் எல்லாமே நமக்கானவை என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

9.
தோழமை:
தோழமையுடன் முன்பு போல நேரம் செலவழிக்க முடியாது. சலித்துக் கொள்ள வேண்டாம், உங்களை நம்பி இருக்கும் நபருக்கென நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டயது கடமை.

10.அலுப்பு:
உறவில் அவ்வப்போது ஈர்ப்பு குறையும். அப்படியான சூழல் உண்டானால், உடனே வேலைக்கு லீவுப் போட்டுவிட்டு, எங்கேனும் இருவரும் தனியாக சென்று வாருங்கள். இந்த பயணம், இல்லறத்திலும், தாம்பத்தியத்திலும் புத்துணர்ச்சி உண்டாக உதவும்.

11.
ஈர்ப்பு:
திருமணமான புதியதில் ஒருவர் மீதான் மற்றொருவருடைய ஈர்ப்பு அதிகமாக இருக்கும். போக போக இயல்பு நிலைக்கு மாற திரும்புவீர்கள். ஆனால், இதை பலரும் ஈர்ப்பு குறைந்துவிட்டது என எண்ணுகின்றனர். இது தான் தவறு. இதை தெளிவாக புரிந்துக் கொண்டாலே இல்லறத்தில் எந்த பிரச்சனையும் வராது.

12.
மதிப்பு:
ஒருவர் மீது இன்னொருவர் மதிப்பு குறையாமல் நடந்துக் கொண்டாலே இல்லறத்தில் எந்த பிரச்சனையும் வராமல் ஸ்மூத்தாக இருக்கும். “தான்” என்ற அகம்பாவம், நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.