Home சமையல் குறிப்புகள் தயிர் இட்லி

தயிர் இட்லி

18

தேவையானவை:

இட்லி மாவு – 2 கப்,
புளிக்காத புது தயிர் – 3 டீஸ்பூன்,
ஓமப்பொடி – 3 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மல்லித்தழை – சிறிதளவு.

அரைக்க:

தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
முந்திரிப்பருப்பு – 6.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

* மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள்.

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.

* அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.

* பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம்.

* அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.

* இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.