Home சமையல் குறிப்புகள் தந்தூரி சிக்கன்

தந்தூரி சிக்கன்

18

கோழி – அரை கிலோ
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி
வெண்ணெய் – சிறிது
தயிர் – 2 மேசைக்கரண்டி
ஃப்ரஷ் க்ரீம் – 50 கிராம்
இஞ்சி விழுது – ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் – ஒரு தேக்கரண்டி
சிவப்பு கலர் பவுடர் – ஒரு சிட்டிகை

கோழியினை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொண்டு ஒவ்வொரு துண்டின் சதைப் பகுதியிலும் கத்தியால் ஆழமாக இரண்டு அல்லது மூன்று இடங்களில் கீறி விடவும்.

மிளகாய்த் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து மையாக கரைத்து கோழித்துண்டுகளின் மீது பூசி 20 நிமிடங்கள் ஊற விடவும்.

தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் க்ரீம், இஞ்சி, பூண்டு விழுது, சீரகத் தூள், கரம் மசாலாத் தூள், கலர் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கோழித் துண்டுகள் மீது பூசவும். மசாலா கலவை பூசப்பட்ட கோழித் துண்டுகளை சுமார் 4 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.

அதன் பிறகு ஊறிய கோழித் துண்டுகளை எடுத்து க்ரில் கம்பியில் வைத்து, முற்சூடு செய்த அவனில் 350 டிகிரி F ல் சுமார் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். தந்தூரி அடுப்பில் செய்வதாக இருந்தால் 8 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது.

சுவையான க்ரில்டு தந்தூரி சிக்கன் தயார்.